si_uni  ta_uni
SinhalaEnglish
சர்வதேச மலைத் தின ஞாபகார்த்தக் கொண்டாட்டம் - 2013

alt

சர்வதேச மலைத் தினத்தின் 11 ஆவது ஞாபகார்த்தத் தினம் இலங்கைஇ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சின் உயிரியல் பல்வகைமைச் செயலகத்தினால் 2013 திசம்பர் மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. நமது வாழ்க்கைக்கு மலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புனர்வை உருவாக்குவதற்கும்இ மலைகளின் அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கும் மற்றும் உலகின் மலைகள் மற்றும் உயர் நிலங்கள் தொடர்பான சாதகமான மனப் பாங்கினை மக்கள் மனதில் ஏற்படுத்துவற்கும் சர்வதேச மலைத் தினமானது வாய்ப்பொன்றாக அமைந்திருக்கின்றது. எனவேஇ வன வளப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஹோட்டன் மேட்டுநில நண்;பர்களினின் ஒத்துழைப்புடன்  ஹோட்டன் மேட்டுநில தேசிய பூங்காவில் இந்தத் தினத்தினை ஞாபகப்படுத்தவதற்காக ஒரு நாள் செயலமர்வொன்று செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குழுக்களாக ஹோட்டன் மேட்டுநில தேசிய பூங்காவூக்கு அண்மையில் தேயிலை பெருந்தோட்டச் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற தேயிலை பயிர்ச் செய்கையினை மேற்கொள்கின்றவர்கள் மற்றுமல்லாது ஹோட்டன் மேட்டுநில நண்பர் அங்கத்தவர்களுமாவர். இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்டத்துறைஇ வனபரிபாலன திணைக்களம்இ தேயிலை ஆராய்சி நிலையம்இ உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்புச் சங்கம்இ ஹெயாரே மற்றும் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்;தகு வலு அமைச்சு போன்றவற்றிலிருந்து 70 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
 
ஹோட்டன் மேட்டுநில தேசியப் பூங்கா - இலங்கை
 
இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டன் மேட்டுநிலமானது உலக மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன் இப் பிரதேசமானது மலை நாட்டுக் காடுகள் மற்றும் மழைக் காடுகளினால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் அதி உயர் மேட்டு நிலமாக இது காணப்படுகின்றது. ஹோட்டன் மேட்டு நிலத்தின் உயரமானது 2இ100 – 2இ300 மீற்றர்கள் (6இ900 – 7இ500 அடிகள்) ஆகும். சாம்பர் மரைஇ கரடிக் குரங்குஇ மகரந்தமலர் மற்றும் சில ஓகீட் பூ வகைகள் மற்றும் கினிஹொட்ட தாவரங்கள் என்பன ஹோட்டன் மேட்டு நிலத்தின் மிக முக்கியமான உயிரியல் பல்வகைமைகளாகக் காணப்படுகின்றன. 
 
alt

ஹோட்டன் மேட்டுநில தேசியப் பூங்கா.

இந்தத் தேசியப் பூங்காவின் மொத்த நிலப்பரப்பு 3இ160 சதுர அடிகளாகும் அத்துடன் இது உள்நாட்டு உயிரியல் பல்வமைக்கான முக்கிய கேந்திர ஸ்தலமாகவூம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப் பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பல உயிரியல் பல்வகைமைகள் அழிவடைந்து வரும் ஆபத்தினை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பிராந்தியமானது 1988 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவொன்றாக பிரகடணப்படுத்தப்பட்டது. இந்த ஹோட்டன் மேட்டுநிலமானது பாரிய மூன்று ஆறுகளான மகாவலிஇ களணி மற்றும் வளவ ஆகியவற்றின் நீரேந்தியாகவூம் காணப்படுகின்றது. ஹோட்டன் மேட்டு நிலமானது சிங்களத்தில் மகா ஏலிய மேட்டுநிலம் என அழைக்கப்படுகின்றது.

திருமதி. ஏ.எச்.எம்.பி. அபயகோன்இ உயிரினப் பல்வகைமைச் செயலகத்தின் பணிப்பாளர்இ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சின் செயலாளர் பிரதான அதிதியாகக் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அவர்கள் கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றியதுடன் அவர்களுடைய அறிவூ மற்றும் மலை சார் உயிரியல் பல்வகைமையின் முக்கியத்தும் மற்றும் பெறுமதிகள் பற்றிய கள அனுவத்தினையூம் பகிர்ந்து கொண்டார்கள். நாட்டில் மலைசார் உயிரியில் பல்வகைமையிற்கு ஏற்பட்டுவரும் அழிவூகளுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றியூம் சுட்டிக் காட்டினார்கள்.
 
alt

சர்வதேச மலை தினத்தின ஞாபகார்த்த நிகழ்வில் பங்குபற்றியோர்கள் - 2013

திரு. பியல் ரவீந்திர குமார் அவர்கள் ஹோட்டன் மேட்டுநிலப் தேசியப் பூங்காவின் காவல் அதிகாரியாக இருப்பதுடன் இவர் ஹோட்டன் மேட்டுநில தேசியப் பூங்கா பற்றிய பின்னணி வரலாற்றினை அடுத்த விரிவூரையினை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னர் மேற்கொண்டார்கள். இத் தினத்தின் பிரதான விரைவூரையானது கலாநிதி. சுரன்ஜன் பர்ணான்டோ நிகழ்த்தினார்கள். மலை நாட்டுப் பிரதேசங்களில் உயிரியல் பல்வகைமையினைப் பாதுகாக்கும் அதேவேளை “எவ்வாறு தேயிலைப் பெருந்தோட்டங்களை முகாமை செய்வது” என்பது பற்றிய விளக்கமான விரிவூரையொன்றினையூம் நிகழ்த்தினார்கள். விரிவூரையினைத் தொடர்ந்து கலந்துரையாடலின் போது தேயிலைத் தோட்டங்களில் உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்பு தொடர்பாக எழுகின்ற நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
 
திரு. விநோத் சில்வாஇ அலகல்ல பெருந்தோட்ட முகாமையாளர்இ 2013 ஆண்டு மலைத் தினம் தொடர்பில் அவருடைய ஹிமாலயன் ஆராய்சி அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். திரு. சமிந்த சேனாநாயக்கஇ ஹோட்டன் மேட்டுநில நண்பர்களின் தலைவர் நன்றி உரையினை நிகழ்த்தியதுடன் மலைத் தின நிகழ்ச்சியின் முதல் அமர்வினையூம் நிறைவூ செய்தார்கள். அவர் விசேடமாக சர்வதேச மலைத் தினம் - 2013 தொடர்பான ஞாபகார்த்தமூட்டல் சார்பாக பெறுமதிமிக்க மற்றும் காலத்திற்குத் தேவையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக உயிரியல் பல்வகைமைச் செயலகத்திற்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டதோடு உயிரியல் பல்வகைமையினைப் பாதுகாப்பதற்காக தேயிலைத் தோட்டங்களில் முகாமைச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான முக்கிய பல விடயங்களை தமது அனுபவம் மூலம் கற்றறிந்த உண்மைகளை பகிர்ந்து கொண்டார்கள். 
 
இரண்டாவது அமர்வானது கள ஆய்வூ விஜயமாக இருந்ததுடன் இதன் போது இலங்கையின் மூன்றாவது அதி உயரமான மலையான தொட்டுபொல மலைக்கான விஜயமாக அமைந்தது. இந்த மலையின் உயரம் ( 2இ357 மீற்றர்கள் (7இ733 அடிகள்) ஆகும். இந்த அமர்வானது கலாநிதி சுரன்ஜன் பர்ணாந்து அவர்களினால் வழிநடாத்தப்பட்டது. சகல பங்குபற்றுனர்களும் மலை சார் உயிரியல் பல்வகைமை முறைமை தொடர்பான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர். 12 வருடங்களின் பின்னர் ஸ்டோபிலன்தஸின் வசந்த காலமாக 2013 திசம்பர் காணப்பட்டது. சில விசேட ஓகீட்ஸ் வகைகளும் இந்தக் காலப் பகுதியின் போது பலர்ந்திருந்தன.
 
alt
தொட்டபொல மலையில் கள ஆய்வூ
 
ஹோட்டன் மேட்டுநில தேசியப் பூங்காவின் அதி உயர் நெலு ( ஸ்டோபிலன்தெஸ்) பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது. இந்தக் காட்சியானது பட்டிபொல நுழைவாயில்இ ஒஹியோ நுழைவாயில் பகுதிஇ அதனை தொடர்ந்து தொடுபொல மற்றும் கிரிகல்பொத மலை உச்சி மற்றும் பார்கஸ் சரிவூ நிலப்பகுதிகளில் இப் பூக்கள் மலர்ந்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளன.
 
alt
      ஸ்டோபிலன்திசெக்சிநிஸ்இ                                       டோபிலன்திஸ்பல்சரிமாஇ                        ஸ்டோபிலன்திஸ்கலிசினாஇ                          ஸ்டோபிலன்திஸ்விஸ்கோசா
 
தொட்டபொல மலையில் கள ஆய்வூ விஜயத்தின் போது நான்கு வகையான ஸ்டோதபிலன்திஸ் மலர் வகைகள் பூத்திருப்பதைக் கண்டோம். ஸ்டோதபிலன்திஸ் மலர்கள் இப் பிரதேசத்திற்கே உரியதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பிரதேசத்தின் தூய்மையான நிலப்பரப்பாகவூம் இது உள்ளது. இலங்கையின் 31 வகையான உயிரினப் பல்வகைமைகள் இப் பிரதேசத்தில் காணப்படுவதுடன் இவற்றில் 23 உயிரியல் பல்வகைமைகள் அழிவடையூம் அபாய நிலையில் இருப்பதுடன் இவற்றில் 20 உயிரினப் பல்வகைமைகள் இந்த மலைப் பிரதேசத்திற்கே உரியதாகவூம் காணப்படுகின்றது.
 
உயிரினப் பல்வகைமைச் செயலகத்தின் சார்பாகஇ இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு அங்கிகாரம் வழங்கிமைக்காக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சின் செயலாளர்இ மேலதிகச் செயலாளர் (என்ஆர்எம்)இ பணிப்பாளர் (உயிரினப் பல்வகைமை) மற்றும் மத்திய மாகாண வன பரிபாலன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் ஆகியோர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலும்இ இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு நடாத்துவதற்கு தங்களுடைய பெறுமதியான நேரத்தை வழங்கி எம்மோடு அர்ப்பணிப்புடன்  செயற்பட்ட கலாநிதி. சுரான்ஜன் பர்ணாந்து மற்றும் திரு. ரஜிக கமகேஇ திரு. பியல் மற்றும் திரு. சிரிபால ஆகியோர்களையூம் குறிப்பிட்டுக் கொள்வதில் நான் பெருமை அடைகின்றேன்.
 
தயாரித்ததும் புகைப்படமெடுத்ததும் : மனோஜ் பிரசன்ன (பி.எ)
உயிரினப் பல்வகைமைச் செயலகம்இ
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சு
 
புதன்கிழமை, 08 ஜனவரி 2014 09:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது