si_uni  ta_uni
SinhalaEnglish
உயிரியல் வளங்கள்இ பேண்தகு முறையிலான பயன்பாடு மற்றும் நன்மைப் பகிர்வூ போன்றவைகளை அணுகுதல் தொடர்பான தேசியக் கொள்கை
தேசியக் கொள்கை ஒன்றிற்கான தேவைப்பாடு
 
இலங்கையானது உயிரியல் வேறுபாட்டில் மிகவூம் செழிப்புவாய்ந்த ஒரு நாடு என்ற வகையில் பெயர்போனதாக காணப்படுகின்றது. இலங்கை ஒரு நாடு என்ற அடிப்படையில் மிதம் மிஞ்சிய சுரண்டல் மற்று உயிரியல் திருட்டு பேன்றவற்றின் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியூள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற ஒழுங்கு முறையான சட்ட ஆதரவூ இல்லாமையின் காரணத்தினால் உரிய முறையிலான அதிகாரமின்றி உயிரியல் வளங்களின் மிதிமிஞ்சிய சுரண்டல் மற்றும் அவற்றை ஏற்றுமதி செய்வதைத் தடுத்து நிறுத்துவது மிகக் கடினமான ஒன்றாக மாறியூள்ளது. உயிரியல் மற்றும் மரபியல் வளங்களில் இருந்து வருகின்ற நன்மைகளை அடைந்து கொள்வதற்காக சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் மூலம் இதற்கான அணுகுமுறை வழங்கப்படல் வேண்டும்.
நாட்டின் தேவையினைப் பூர்த்தி செய்வற்காக பொருள் பரிமாற்ற ஒப்பந்த வரைபு ஒன்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் மூலம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொருள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று அதன் மூலம் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப்பட வேண்டியிருக்கின்ற விதி முறைகள்இ கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை உள்ளடக்க முடியாமல் இருப்பதால்இ உயிரியல் வளங்கள் மற்றும் நன்மைப் பகிர்வினை அணுகுவது தொடர்பான ஒரு தௌpவான கொள்கை நிச்சயம் இங்கு காணப்படல் வேண்டும்.
மேற்கூறப்பட்ட அம்சங்களில் கூடுதலானவை தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் மூலம் விவாதிப்பதற்கு போதாமல் இருக்கின்றது. இலங்கை அரசாங்மானது அணுகு முறையினை ஒழுங்கமைப்பதற்கு விரும்பும் பட்சத்தில்இ மேலே கூறப்பட்ட விடயங்கள் எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்வதற்கான தேவைப்பாடு காணப்படலாம். இவ்விரு வெளிப்படையான தொரிவூகளும் தற்போது காணப்படுகின்ற ஒன்று அல்லது அதிகமான சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட  சட்ட கட்டமைப்பின் ஊடாக அல்லது விதிமுறைகளின் ஊடாக காணப்படுகின்றது.
உயிரியல் வளங்கள் மற்றும் நன்மைப் பகிர்விற்கான அணுகுமுறை தொடர்பான தேசியக் கொள்கையானது வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் கல்விஇ பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றுக்காக இவ்வளங்களின் பேண்தகு பயன்பாட்டினை உறுதிப்படுத்தும் அதேவேளைஇ தற்கால மற்றும் எதிர் காலச் சந்ததியினரின் நலன் கருதி உயிரியல் வளங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் அற்பணிப்பினை மறுபடியூம் ஆரம்பிக்கின்றது. 
தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்குப் பின்னால் காணப்படுகின்ற இத்தேசியக் கொள்கையானது  உயிரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு தன்மையிலான பயன்பாடு போன்றவற்றுடன் அக்கரை கொள்ளச் செய்வதோடு உயிரியல் வளங்களின் முகாமைத்து அணுகுமுறை மற்றும் நன்மைப் பகிர்வூ போன்ற விடையங்களில் ஓரே கொள்கையாக செயற்படும்.
இக்கொள்கையானது நாட்டிற்கான உச்சப்பயனை அடைந்து கொள்வதற்கான வளங்களை ஒழுங்கமைப்பதற்காக உயிரியல் வளங்களை முகாமைத்துவம் செய்கின்ற தொடர்புபட்ட அனைத்து அதிகார சபைகளையூம் வழிநடாத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
 
வரையறைகள்கள்
 
உயிரியல் வளங்கள்: மனிதகுலத்திற்கு நேரடியாகவோஇ மறைமுகமாகவோ அல்லது சாத்தியமுள்ள பயன்பாட்டின் உயிரியல் வேறுபாட்டுப் பிரிவூகள்.
 
பேண்தகு தன்மை: எதிர்காலச் சந்ததியினர்கள் அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான திறமையினை உடன்பாடின்றி தற்பேதைய தேவைகளை அடைந்துகொள்கின்ற பயன்பாடு.
 
பாதுகாப்பு: இயற்கை வளங்களில் எமக்கு எவ்வளவூ உரிமை உள்ளதோ அதேபோன்றே எதிர்கால சந்ததியினர்களுக்கும் உரிமை உள்ளது என்பதை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொண்டுஇ உயிரியல் வளங்களை அவைகளின் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் சமூகத்தின் நன்மைக்காகவூமான புத்திசாலித்தனமான பயன்பாடு மற்றும் முகாமைத்துவம். 
 
தேசியக் கொள்கை
 
இலக்கு: உயிரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு தன்மையிலான பயன்பாடு மற்றும் அவைகளில் இருந்து வருகின்ற நன்மைகளின் நியாயமான மற்றும் சமமான பங்கீடு போன்றவற்றை உறுதிப்படுத்தல்.
 
குறிக்கோள்
 
தற்போதுள்ள மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மை கருதி பாதுகாப்புஇ ஆராய்ச்சி பேண்தகு தன்மையிலான பயன்பாடு மற்றும் நன்மைப் பகிர்வூ போன்றவற்றின் ஊடாக உயிரியல் சார்ந்த வளங்களைப் பாதுகாத்தல். 
உயிரியல் வளங்களுக்கான அணுகு முறையினை ஒழுங்குபடுத்துவதற்கான செயல் திறன் மிக்கதும் மற்றும் பயன்னுள்ளதுமான முறையினை உருவாக்கி முகாமைத்தவம் செய்தல் மற்றும் இவ்வளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து எழுகின்ற நன்மைகளின் நியாயப்பாடு மற்றும் சமமான பங்கீடு போன்றவற்றை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களில் தொடர்புபட்ட அதிகார சபைகளுக்கு வழிகாட்டல்.
உயிரியல் வளங்களின் பேண்தகு தன்மையிலான பயன்பாடு மற்றும் உயிரியல் வளங்களின் நேரடி மற்றும் மறைமுகமான பயன்பாட்டில் இருந்து எழுகின்ற நன்மைகளின் சம பங்கீடு மற்றும் பாரம்பரிய அறிவூடன் தொடர்புபட்ட விடயங்களை உறுதிப்படுத்தல்.
உயிரியல் வளங்களின் கண்காணிப்பு மற்றும் கண்காணிக்கப்படாத பயன்பாடுகளில் இருந்து எழுகின்ற நன்மைப் பங்கீட்டிற்கான பொறிமுறையினை உருவாக்குதல்.
நன்மைகள் மற்றும் நன்மைப் பங்கீடுகள் போன்றவற்றின் உரிய முறையிலான மற்றும் பொறுப்புக்கள்இ அணுகு முறைகள்இ நேரம் போன்றவற்றினை உறுதிப்படுத்தல்.
மேற்கூறப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக தொடர்புபட்ட அக்கரையாளர்களுக்கு மத்தியில்  ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றினை மேம்படுத்தல்.
உயிரியல் வேறுபாட்டுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
 
கொள்கைகள் 
 
i. இலங்கையின் உயிரியல் வளங்களின் மீதுள்ள தேசிய இறையாண்மையினை உறுதிப்படுத்தல்
ii. இலங்கையில் உயிரியல் வளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்
iii. நாட்டின் நன்மை கருதி இலங்கையின் உயிரியல் வளங்களின் பேண்தகு தன்மையிலான பயன்பாட்டின் அணுகுமுறை மற்றும் மேம்பாட்டிற்கு வசதியளித்தல்
iஎ. உயிரியல் வளங்களைப் பொறுத்தவரை விவசாயிகளினதும் மற்றும் உள்ளுர் சமூகங்களினதும் உரிமை மற்றும் தேவையினை இனங்காணுதல்
எ. அணுகுமுறையானது முன் தெரிவிக்கப்பட்ட ஒப்புதல் (Pஐஊ) மற்றும் பரஸ்பர ஒப்புதல் விதிமுறை (ஆயூவூ) போன்றவற்றின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
எi. உயிரியல் வளங்கள் மற்றும் நன்மைப் பங்கீடு போன்றவற்றுக்கான அணுகு முறையினை ஒழுங்கமைப்பதற்கான செயல் திறன்மிக்க மற்றும் பயனுள்ள சட்டப் பொறிமுறையின் அமுலாக்கத்தினை உறுதிப்படுத்தல்
எii. உயிரியல் வளங்கள் மற்றும் தொடர்புடைய பாரம்பரிய அறிவூ போன்றவற்றில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற நன்மைகள் அதனை பாதுகாத்துள்ள மக்கள் மற்றும் சமூகங்களுக்கு பங்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தல்
எiii. இணைந்ததாக அல்லது உயிரியல் வளங்களின் ஆராய்ச்சியின் பயனாக உள்ள காப்புரிமை அல்லது பெறப்பட்ட பிற அறிவூசார் சொத்துரிமையானதுஇ காப்புரிமை அல்லது பெறப்பட்ட ஏனைய அறிவூசார் சொத்துரிமைக்கான உற்பத்தி அல்லது நிகழ்முறைகளின் அபிவிருத்திச் செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட ஏதாவது உயிரியல் வளங்கள் மற்றும் அறிவூ போன்றவற்றின் வழக்கமான பயன்பாடு தடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தல்.
iஒ. நாட்டின் உயிரியல் வளங்களானது அவைகளுக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு அச்சுறுத்தலையூம் கையாள்வதற்குரிய ஒரு முறையான அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படல் வேண்டும். ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து தொடர்புடைய இடத்தில் அல்லது அதற்கு வெளியில் அவற்றைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
ஒ. உயிரியல் வளங்களின் அணுகுமுறை மற்றும் நன்மைப் பகிர்வூக் கூறுகள் தொடர்பான ஆராய்ச்சிஇ கல்வி மற்றும் விழிப்பூட்டல் போன்றவற்றினை மேம்படுத்தல்  
 
அறிக்கைகள்
 
1. உயிரியல் வளங்களின் அணுகுமுறை மற்றும் பேண்தகு தன்மையிலான பயன்பாடு போன்றவற்றை ஒழுங்கமைக்கின்ற பொருத்தமான கௌ;கை மற்றும் சட்ட நடவடிக்கைகளை உருவாக்கிப் பாதுகாத்தல். மேலும் இது தவிர எழுகின்ற நன்மைகளின் நியாயமான மற்றும் சமமான பங்கீடுகள்.
2. பாதுகாப்பினை ஊக்குவிப்பதற்காக சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயிரியல் வளங்களின் நன்மைகளைப் பங்கீடு செய்வதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி அமுல்படுத்தல். 
3. இலங்கையின் தேவைப்பாடுகள்இ விஷேடமாக உணவூ மற்றும் விவசாயம் போன்றவற்றுக்கான பயணுள்ள உயிரியல் வளங்களைப் பெற்றுக் கொள்கின்ற விடயத்தில் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தி மேம்படுத்துதல்
4. பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக வேண்டி மதிப்புள்ள உயிரியல் வளங்களை இனங்கண்பதற்கென  சமூகங்களை ஊக்குவிப்பதோடு  அவைகளுக்கு சரியான தொழில் நுட்பத்தினை வழங்குவதல்.
 
திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013 08:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது