si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு All News இலங்கையில் புதிய வருகைகளின் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் தொடர்பான அறிமுகமும் அவற்றின் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்தலும் என்பவற்றுக்கான உலக சுற்றாடல் வசதிகளின் (GEF) கருத்திட்டம்
இலங்கையில் புதிய வருகைகளின் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் தொடர்பான அறிமுகமும் அவற்றின் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்தலும் என்பவற்றுக்கான உலக சுற்றாடல் வசதிகளின் (GEF) கருத்திட்டம்

 

கருத்திட்டத்தின் ஆரம்ப செயலமர்வு

2012 Mk; Mz;L jpnrk;gu; 20

 

உயிரியல் பல்வகைத்தன்மை சமவாயத்தின் 8 ஆவது பிரிவு பிரகாரம், “ அனைத்து அங்கத்துவ நாடுகளும் தமது சுற்றாடலில் உள்ள புதிய வருகைகளின் ஆக்கிரமிப்பு உயிரினங்களிடத்திலிருந்து ஏற்படும் இடர்களை  தவிர்த்துக்கொள்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடாக இலங்கை, இக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சினால் உயிரியல் சுற்றாடல் வசதிகளின்    (GEF-UNDP) நிதி உதவிகளின் கீழ் இலங்கையில் புதிய வருகைகளின்  ஆக்கிரமிப்பு உயிரினங்கள் தொடர்பான அறிமுகமும் அவற்றின் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்தலும்  என்பவற்றுக்காக கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது.

 

 

மேற்படி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான செயலமர்வு

2012 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 20 ஆந் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.30 வரை கொழும்பு 03, காலிமுகத்திடலில் இலக்கம் 25 என்ற இடத்தில் அமைந்துள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில், தாஜ் பொலரூம் மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை சுற்றாடல் அமைச்சு மேற்கொண்டதுடன், பிரதான அதீதிகளாக  சுற்றாடல் துறை அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களும்  பிரதி அமைச்சர் கௌரவ அப்துல் காதர் அவர்களும் பங்பற்றினார்கள்.

    செயலமர்வின் விசேட சந்தர்ப்பங்கள்

  • கருத்திட்டத்தின் உத்தியோகபூர்வ இலட்சினையை அறிமுகப்படுத்தல்.
  • புதிய வருகைகளின்  ஆக்கிரமிப்பு உயிரினங்கள் தொடர்பான இணையதளத்தைஆரம்பித் வைத்தல்.

 

 

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012 12:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது