si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு All News பாதரசம் பயன்படுத்துவதனை நிறுத்துவதற்கு முற்றுபுள்ளி வைப்போம்.
பாதரசம் பயன்படுத்துவதனை நிறுத்துவதற்கு முற்றுபுள்ளி வைப்போம்.

alt

 

நாம்  அன்றாடம் வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தும் திரவ வடிவுடைய மூலப்பொருளான பாதரசம் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பது தொடர்பாக இது வரை கூடிய கவனம் செலுத்தப்படாத போதிலும், தற்காலத்தில் அது தொடர்பாக உலகத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. முற் காலத்தில் குறித்த மூலப்பொருள் அதிக ஆயூட்காலத்தை பெற்றுக்கொடுக்கும்  என்ற அடிப்படை  நம்பிக்கை இருந்த போதிலும், அதன் பக்க விளைவுகளாக மனிதர்களுக்கு உடல் உள பிரச்சினைகள் தோன்றலாம். நீண்ட நாள்களாக பயன்படுத்துகின்ற மேற்படி மூலப்பொருளுக்கு எதிராக ஒரு தீர்வை கண்டு பிடிப்பதற்காக இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் பாதரசம் தொடர்பாக சட்டரீதியாக இணைந்துள்ள நாடாக (இது 2013  ஆம் ஆண்டில் நடைமுறைப்படவுள்ளது.) மிக விரைவாக செயற்பட்டு வருகின்றது.   

alt
alt

 

நீங்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற வெப்பமானி மற்றும் ஏனைய பழமை வாய்ந்த பல் நிரப்புகள் என்பவற்றில் பாரத்தன்மையுடைய உலோகமான பாதரசம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை  சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவோ சருமத்தில் படுவதன் மூலமாகவோ உடலுக்குள் செல்லலாம்.  இது  உடலுக்குள் சேர்வதால் நாளடைவில் கடும் நோயோ அல்லது  மரணமோ ஏற்படலாம். இதன் விளைவுகள் காரணமாக  தலைவலி அல்லது பாதரசம் நீராவியாவதால் நீண்ட கால உளவியல் பிரச்சினைகள் போன்ற  ஆபத்தான நிலைமைகள்  ஏற்படலாம். சில தொழில்களின் இயல்பு பிரகாரம், அவற்றில் ஈடுபடுவோருக்கு எப்பொழுதும் பாதரசம் பயன்படுத்துவதற்கு நேரிடலாம்.   அவர்களின்  சில இயல்பு மாறிய நடத்தை மூலமாக சமூகத்தில் மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்தி  இனம்காணலாம்.  அலிஸ் இன்வொன்டலன்ட்  (Alice in Wonderland) கதையில் வருகின்ற மெட் ஹட்டர்  (Mad Hatter) கதாபாத்திரம் மற்றும் பாடசாலைகளில் பல் சார்ந்த துறையுடன் பணியாற்றுகின்ற ஊழியர்களை உதாரணமாக குறிப்பிடலாம். அதே போன்று தங்கம், வெள்ளி அகழ்வு என்பவற்றுக்காக சுரங்கங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள், துப்பரவற்ற உலோகங்களிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி என்பவற்றை வேறுபடுத்தும் போது பாதரசத்தை பயன்படுத்த வேண்டிள்ளது. (தொகுப்பு : IPEN – An Introduction to Mercury Pollution, 2010)

பாதரசம் பல்வேறு வகையில் இயற்கையாக கிடைக்கப்பெறுகின்றது. அதாவது மூலப்பொருள்களான பாதரசதின் சேர்மானங்கள் மற்றும் கரிய பாதரசம் என்ற வகையிலாகும். ( மெதில் மர்கரி இத் தொகுதியை சார்ந்த மலிவான வகையாகும்). வளி மண்டலத்தில் கிடைக்கப்பெறுகின்ற மூலப் பொருளான பாதரசம், நீரியல் வளங்களில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வாயிலாக பெற்றுக்கொண்டு அவற்றை சேமித்துக்கொள்வதுடன், அவை குறித்த மூலப்பொருட்களை பாதரச மெதில் மர்கரி நிலைக்கு மாற்றுகின்றது. பின்னர் அவை  உயிரியலாக சிறுக சிறுகச்  சேர்வதுடன், உணவு சங்கிலியுடன் செல்கின்ற போது உயிரியில் நிலை முழுநிறைவடைகின்றது. உயிரினங்களுக்கிடையில் ஏனைய விலங்கு உணவுகளையும் பார்க்க மனித உடலில் பாதரசம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். மனித உடலில் பாதரசம் உட்செல்கின்ற மற்றுமொரு முறை யாதெனில், நீரியல் சூழல்களில் வாழ்கின்ற உயிரினங்களை உணவாக உட்கொள்ளுதலாகும். நாம் அன்றாட உணவாக உட்கொள்கின்ற கடல் உணவுகள் கனிப்பொருள்கள்  அதிகமாக உள்ளதுடன், நாளடைவில் உடலுக்குள் இவை சேர்வதுடன்,  உயிரியலாக சிறுகச்சிறுக சேர்கின்ற பாதரசத்தையும் கொண்டமைந்துவிடுகிறது.  1965 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் மினிமாட்டா பிரதேசத்தில் இவ்வாறு கடல் உணவுகளில் சேர்திருந்த மெத்தில் மர்கரி நஞ்சாசியதன் காரணமாக ஏறத்தாழ 1784 பேர்  மரணமடைந்ததுடன், இது மினிமாட்டா நோய் என்று அழைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பின்னர் பாதரசம் நஞ்சாதல் தொடர்பாக உலகத்தின் கவனம் அதிகமாக செலுத்தப்பட்டது. (தொகுப்பு.( UNEP – The Mercury Issue, 2008)

பாதரசம் போன்ற பாரமான உலோகங்களில் உள்ள நச்சு காரணிகளில் உள்ள பிரதான பிரச்சினை யாதெனில், அவை உடலுக்குள் உட்சென்றவுடன், உடலுக்குள் விருத்தியடைதலாகும். இவை பிரதானமாக மீன்கள் மற்றும் கடல் உணவுகளில் ஏற்படுவதுடன், அவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் மனித உடலுக்குள் செல்கின்றது. காலப்போக்கில் சில பாதரச சேர்மானங்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை.  மேலும் மூலை,  நரம்புகள், தசைகள், தைரொயிட், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும்  கண்களில் தேக்கி வைக்கப்படுகின்ற  பாதரசம் வெற்றிகரமாக   உடலிலிருந்து வெளியேற்றுவதற்கான   முறைமையியல் தொடர்பாக  ஆய்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். ஆகையால் நீங்கள் உணவு உட்கொள்கின்ற போது கவனமாக இருத்தல் வேண்டும். IPEN – An Introduction to Mercury Pollution, 2010)

பாதரசம் நஞ்சாகும் மற்றமொரு முறை யாதெனில், அது நேரடியாகவே சருமத்துடன் படுதலாகும். அது எவ்வாறு ஏற்படுகின்றதென்றால், சருமத்துடன் படுதல் அல்லது சருமத்தை நிறமூட்டுவதற்கு பயன்படுத்துகின்ற க்ரீம் வகைகள், பூச்சுப்பொருள்கள் அல்லது  வீடுகளில்  தயாரிக்கப்படும் மூலிகைச்சாறுகளில்  பாதரசம் இருத்தலாகும். தயோமர்சல்  (Thiomersal) என்ற வர்த்தகப்பெயரில்  அழைக்கப்படுகின்ற மர்த்யோல்ட் சேர்மானம் பங்கசு மற்றும் நுண்ணுயிர்க்கொல்லியாக செயற்படுமாயினும், அதிலும் பாதரசம் உள்ளன.

கருவுற்ற நிலையில் உள்ள பெண்களுக்கு இந் நிலை பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது கருவில் உள்ள குழந்தைக்கு தண்ணீர், உணவு. அல்லது பூச்சுப்பொருட்கள் ஊடாக பாதரசம் உட்சென்றால், குழந்தையின் சுவாச முறைமையை மீண்டும் மாற்றிட இயலாத  நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். . (தொகுப்பு: IPEN – An Introduction to Mercury Pollution, 2010)

தலைவலி மற்றும்  நினைவாற்றல் குறைதல் தவிர்ந்த பாதரசம் அடங்கிய  சேர்மானங்கள் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகின்ற ஏனைய பிரதான பக்கவிளைவு யாதெனில், உடல் இயக்கத்திற்கு காரணமாக அமையும் கூட்டிணைப்பு  இல்லாமல் போதலாகும்.  பாதரசம் நஞ்சாவதால் ஏற்படக் கூடிய விளைவுகளான  அதிர்ச்சி, நினைவாற்றல் குறைதல், தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுதல் வரை வேறுபடலாம். கடுமையாக பாதரசம் உடலுக்குள் செல்வதால் நெஞ்சு வலி, இருமல், உடல் கோளாறுகள்  பிரமை போன்றவை ஏற்படலாம். அத்துடன்  தற்​கொலை கூட செய்துக்கொள்ள கூடும். அதே போன்று நீண்ட காலமாக ஓரளவு பாதரசம் உடலுக்குள் செல்வதால் களைப்பு,  நினைவாற்றல் குறைதல் மற்றும் மன அழுத்தம் போன்ற நிலைமைகள்  ஏற்படலாம்.

பாதரசம் பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்வதற்கென்றால் முதலாவதாக, நீங்கள் அன்றாட பயன்படுத்துகின்ற உற்பத்திகளில் பாதரசம் உள்ளதா என்பது தொடர்பாக  கவனம் செலுத்தல் வேண்டும். மேலும் பாதரசம் உள்ளடங்காத உற்பத்திகளை தெரிவு செய்தல் வேண்டும். எவ்வாறாயினும் பாதரசம் உள்ளடங்காத உற்பத்திகளை பெற்றுக்கொள்வதற்கு முடியாத சந்தர்ப்பங்களில் நீங்கள் பயன்படுத்துகின்ற உற்பத்திகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு .கவனமாக செயற்படுதல் வேண்டும்.  

நிலைமை இவ்வாறாக இருப்பினும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் யாதெனில், பெரும்பாலும் அதிகமாக கிடைக்கப்பெறுகின்ற உற்பத்திகள் அதாவது, பூச்சுகள், வெப்பமானி, thermostats, மின்கல அடுக்குகள், (batteries,)  மின் குமிழ்கள்,  கையில்கொண்டுச் செல்கின்ற கணக்கிட உதவும் கருவி (calculators) , கெதோட ஊடுகதிர் குழாய்கள்  (CRTs) மற்றும்  கிருமி நாசினிகள்  என்பவற்றில் பாதரசம்  இருத்தலாகும்.  ஆகையால் மேற்படி உற்பத்திகளை அகற்றும் போது, ஏதேனுமொரு வகையில் பாதரசம் பரவினால், அவை வெளியேறுவதை தவிர்ப்பதற்கு அவற்றை பாதுகாப்பாக மூடப்பட்டு அகற்றுதலும்,   அவை பொதுவான  கழிவு பொருளாக அன்றி நச்சுப்பொருளாக பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சிறிய பிள்ளைகளிடமிருந்தும், ஏனையவர்களிடமிருந்தும் ஒதுக்கப்படுதல் முக்கியமாகும். எவ்வாறாயினும், நீங்கள் இக் கட்டுரையை வாசிப்பதற்கு  பாதரசம் உள்ள அதிகப்படியான ஒளியை தருகின்ற விளக்கு அல்லது வேறு பாதரசம் அடங்கிய விளக்குகளை பயன்படுத்தினால், அவற்றை அகற்றும் போது பாதுகாப்பான முறைகளை கையாளுதல் வேண்டும். மேலும் சுற்றாடலிருந்து குறித்த நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு நாம் பொறுப்பாக இருத்தல் முக்கியமாகும்.

ஏதேனுமொரு  வகையில் திரவ வடிவிலான பாதரசம் பரவினால் அல்லது சிதறினால் அதனை அகற்றுவதற்கு, பாதரசத்தை தொடுதலாகாது. அவை  ஏதேனும் உறிஞ்சும் தன்மையுடைய பொருற்கள் மீதோ அல்லது உடுப்புகளிலோ பட்டால் அவற்றை கவனமாக பயன்பாட்டிலிருந்து அகற்றப்படுதல் வேண்டும்  அதற்கு காரணம் யாதெனில். அவ்வாறான உடுப்புகளை கழுவினாலும், அதிலுள்ள பாதரசம் முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியாமையாகும். பாதரசம் உள்ளடக்கப்பட்டுள்ள பொருள்களை எரிப்பதன் மூலம் அதிலிருந்து வெளியேறுகின்ற நீராவியை சுவாசிக்க நேரிடுவதால், அவை உள்ளடக்கப்பட்டுள்ள எதனையும் எரித்தலாகாது. பாதரசம் உள்ளடக்கப்பட்டுள்ள கணினிப்பகுதிகள், மின் உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் கழிவுபொருட்கள் என்பவற்றை எரிக்கும் போது, அதிலுள்ள பாதரசத்தை சுவாசிப்பதன் மூலம் உடலுக்குள் உட்செல்கின்ற வாறு மாற்றமடையலாம். அதே போன்று ஒரு நபரின் உடலுக்குள் நீண்ட காலமாக சேர்ந்திருந்த பாதரசம் அவர் மரணமடைந்தவுடன் தகனம் செய்வதன் மூலம் வளிமண்டலத்தில் சேர்ந்துவிடும்.

ஆகையால் பாதரசம் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தும் போது அது தொடர்பாக கவனம் செலுத்தப்படுதல்  வேண்டும். அத்துடன் அவற்றை பாதுகாப்பாக அகற்றப்படுவதற்கு செயற்படுவதன் மூலம்  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாது முழுமொத்த இலங்கையின் நலனுக்கும் அது காரணமாக அமையும். அது மட்டுமல்லாது  இலங்கை, பாதரசத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு எதிராக செயற்படும் முதன்மையான நாடாவதற்கும் உதவியாக அமையும். மேலும். பாதரசத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு எதிராக போராடுவதன் மூலம் நீங்கள் தற்போது உலகத்தில் நிலவுகின்ற பிரதான சுகாதார எச்சரிக்கயை தவிர்ப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குபவர் மட்டுமல்ல பல மில்லியன் அளவிலான உலக வாழ் மக்களை பாதுகாத்து கொள்வதற்காக அளப்பரியா பணியை நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதற்கும் சந்தேகமில்லை.

தயாரிப்பு :- வளி வளங்கள் முகாமைத்துவ மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவு/ சுற்றாடல் அமைச்சு   

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 11:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது