si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு கடமைகளும் பொறுப்புக்களும்
கடமைகளும் பொறுப்புக்களும்
  1. தரவுகளைச் சேகரித்தல் அமைச்சின் வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதுடன் உரிய நேரத்திற்கு திறைசேரிக்கு சமர்ப்பித்தல்.

  2. அமைச்சின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேவைப்பாடுகளுக்கேற்ப பொதுத்திசேரியிடமிருந்து முற்பணங்களைப் பெறுதல்.

  3. அமைச்சின் வருமானங்கள் கொடுப்பனவுகள் தொடர்பான செயற்பாடுகள்.

  4. ஒதுக்கீட்டுக் கணக்கினைத் தயாரிப்பதும் பொது அரச உத்தியோகத்தர்களின் 'b' கணக்கிற்கான முற்பணங்களைத் தயாரித்தலும் அவைகளை உரிய நேரத்திற்கு கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தலும்.

  5. மாதாந்த கணக்குகளை தயாரித்தலும் உரிய நேரத்தில் பொதுத்திறைசேரிக்கு கையளித்தலும்.

  6. திறைசேரியின் கணனிமயப்படுத்தப்பட்ட தரவுகளுடன் அமைச்சின் கணக்குகளை இணங்கச் செய்தல்.

  7. அமைச்சுக்குத் தேவையான பண்டங்களை கொள்வனவு செய்தல் உரிய பிரிவுகளுக்கு அவர்களின் தேவைகளின் பொருட்டு விநியோகித்தலும்.

  8. இருப்புக்கணக்கெடுப்புக்களை மேற்கொள்ளலும், இழப்புக்கள் மற்றும் சேதங்களை பதிவளிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தலும்.

  9. அமைச்சின் உள் எல்லைக்குள் வரும் கருத்திட்டங்கள் நிறுவனங்கள், திணைக்களங்களின் கணக்குகள் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

  10. அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களின் சார்பாக பொது முயற்சிகள் குழு மற்றும் பொதுகணக்கு குழுவுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

  11. பொது நிதி செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், அரச நிதி ஒழுங்குவிதிகளின் பிரகாரம் அவற்றினை கண்காணிப்பதுடன் அமைச்சுக்களாலும் அரச அதிகாரிகளாலும் விநியோகிக்கப்படும் தாபனக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகள் அரச நிதி ஒழுங்குவிதிகளின் பிரகாரம் அவற்றைக் கண்காணித்தலும்.

  12. கணக்காய்வுக் கேள்விகளுக்கான பதில்களை வழங்குதல்.

  13. வங்கிக் இணக்கக் கூற்றுக்களைத் தயாரித்தலும் உரிய நேரத்திற்கு கணக்காய்வாளர் நாயகத்திற்கும் திறைசேரிக்கும் அவற்றை அனுப்புதலும்.

  14. மாதாந்தம் கணக்காய்வுக்கிளைகளுக்கு உரிய முறையில் பணம் செலுத்தப்பட்ட உறுதிச்சீட்டுக்களை கையளித்தல்.

  15. F.R.66.இன் பிரகாரம் விடய வகுப்புக்களுக்கிடையிலான நிதி ஏற்பாடுகளை மாற்றிக்கொள்ளல்

புதன்கிழமை, 16 மே 2012 22:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது