si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பிரிவின் பிரதான தொழிற்பாடுகள்
பிரிவின் பிரதான தொழிற்பாடுகள்
  • வளி வள முகாமைத்துவம், சுற்றாடல் தர முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகளுடன் தொடர்புடைய கடமைகள் மற்றும் தொழிற்பாடுகளுக்கு வளி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவு பொறுப்பாக உள்ளது
     
  • வளித்தரம் மீதான கொள்கை, வாகன வெளிவிடுகை (VET) பரிசோதிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அமுல்படுத்துகை எரிபொருள் தர முன்னேற்றமாவன வளித்தர முகாமைத்துவத்தின் கீழ்வரும் முக்கிய விடயங்களாகும். பங்காண்மையாளர்கள் அனைவரும் மேற்படி செயற்பாடுகளின் அமுல்படுத்தல்களுக்கு தமது பங்களிப்பினை வழங்குகின்றனர்.
     
  • கொள்கை உருவாக்கம் மற்றும் நீர்த்தர முகாமைத்துவ அமுல்படுத்துகை, கழிவு முகாமைத்துவம், நீடித்து நிலைக்கக்கூடிய சக்தி மீதான மாதிரி நிகழ்ச்சித்திட்டங்கள், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், சுற்றாடல் தர மதிப்பீடு, மற்றும் சுற்றாடல் மீதான முறைப்பாடுகள் மீது கவனம் செலுத்துவதற்கான செயற்பாடுகள் என்பன சுற்றாடல் தர முகாமைத்துவத்தின் பிரதான செயற்பாடுகளாக உள்ளன.
     
  • ஐக்கிய நாடுகள் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் UNEP), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலகளாவிய சுற்றாடல் வசதிப்படுத்துகை (GEF), தென்னாசிய சுற்றாடல் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் (SACEP), உலகளாவிய மாற்ற ஆய்வுக்கான ஆசிய பசுபிக் வலைப்பின்னல் APN), உலக பாதுகாப்பு ஒன்றியம் (IUCN), தென்னாசிய கடல்கள் நிகழ்ச்சித்திட்டம் (SASP) மற்றும் ஏனைய சர்வதேச சுற்றாடல் நிறுவனங்கள் மற்றும் தேசிய Basel சமவாயம் மற்றும் Stockholm சமவாயம் என்பவற்றுக்கான தேசிய குவியப்புள்ளியாக தொழிற்படுபவைகள் சர்வதேச இரசாயனப்பொருட்கள் தந்திரோபாய அணுகுமுறை (SAICM) என்பனவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளை வசதிப்படுத்துவம் சர்வதேச பிரிவின் கீழ்வரும் முக்கிய விடயங்களாகும்.
புதன்கிழமை, 16 மே 2012 12:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது