si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு மேன்முறையீட்டுச் செயன்முறை
மேன்முறையீட்டுச் செயன்முறை

2

ஈரவலயத்தில் கட்டுப்பாடின்றி வளரும் இயலுமையுடைய கடற்தாவரமாகிய Ludwigia sedioides விசாரணை

1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23B அல்லது 23D  ஒரு பிரிவான சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை இரத்துச் செய்தல் அல்லது ஒத்திவைத்ததை மீளப் புதுப்பித்தலுக்கு மறுத்தல் அல்லது வழங்க மறுத்தல் என்பவற்றுக்கு எதிரான மேன்முறையீட்டுக்கு விண்ணப்பம் செய்யும் ஒழுங்குவிதிகளானவை (இதற்குப் பின் இவ் ஒழுங்குவிதிகள் அந்தச் சட்டமென எடுத்தாளப்படும்) அதனை விநியோகிப்பதற்கோ அல்லது ஒத்திவைப்பதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ அவ்வகையான சட்டத்தை இரத்துச் செய்வதற்கோ அச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரசபையோ அல்லது எந்த அரசாங்க திணைக்களமோ, நியாயதிக்க சபையோ உள்ளுராட்சி அதிகாரசபையோ அல்லது அரச உத்தியோகத்தருக்கு எதிராக மேன்முறையீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான ஒழுங்குவிதிகள் பிரயோகிக்கப்படும்..

புதுப்பிக்க மறுப்பு தெரிவித்தல், சுற்றாடல் பாதுகாப்பு விபத்தை இரத்துச்செய்தல் வழங்க மறுத்தல், என்பவற்றுக்கு எதிரான பிரிவு உ இன் கீழான மேன்முறையீடுகள் அமைச்சின், அமைச்சின் சுற்றாடல் விடயத்திற்கு பொறுப்பான செயலாளரிடம் தீர்மானத்தின் அறிவிப்புக்கு 30 நாட்களிற்கு உள்ளாக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும். இவ் மேன்முறையீட்டின் பிரகாரம் பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் எழுத்தில் அமைந்திருப்பதுடன் மேன்முறையீடு செய்பவரால் கைச்சாத்திடப்பட்டிருப்பதுடன் மேன்முறையீடு செய்பவர் ஒரு ஆளின் அமைப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு பணிப்பாளரினாலோ அவ்வமைப்பின் அதிகாரமுள்ள அதிகாரியாலோ செயலாளராலோ கைச்சாத்திடப்பட வேண்டும். 

 

(ஆ).குறிக்கப்பட்ட நேரகாலத்திற்குள்ளாக அமைச்சின் செயலாளருடன் நேரகாலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

(இ).மேன்முறையீடு செய்யப்படுவதற்கு எதிராக தீர்மானத்தின் பிரதியொன்றையும் இணைக்கப்பட வேண்டும்.

(ஈ).மேன்முறையீடு செய்வதற்கான அடிப்படைகளின் கடமை இலக்க பந்திகளை சுருக்கமாக காட்டப்பட வேண்டும்.

(உ).மேன்முறையீடு செய்பவர் நாடிநிற்கும் நிவாரணம் குறிப்பிடப்பட வேண்டும்.

(ஊ).அதிகாரசபையாலோ அரசாங்க திணைக்களத்தினாலோ, கூட்டுத்தாபனத்தினாலோ,  நியாயதிக்க சபையினாலோ அல்லது உள்ளுராட்சிசபையினாலோ அல்லது அரசாங்க அதிகாரியாலோ யாராக இருந்தாலும் மேற்கொள்ளப்படும் விசாரணை அல்லது பரிசோதனை குறித்தும்  தரப்பைச் சேர்ந்த ஆட்களின் அல்லது அமைப்புக்களின் பெயர்கள் விலாசங்கள் குறி்ப்பிடப்பட வேண்டும்.

(ii). ஒன்றின் தேவைப்பாடுகளுடன் ஒத்துப்போகாத எந்த மேன்முறையீடும் சொல்லப்பட்ட தேவைப்பாடுகள் ஒத்துப்போகச் செய்யப்படும் வரைக்கும் செயன்முறைப்படுத்தப்பட மாட்டாது. செயலாளர் மேன்முறையீட்டாளருக்கு எழுத்துமூலம் இவ்வாறு ஒத்துப்போகதிருப்பது குறித்து அறிவித்தல் கொடுப்பார். அறிவித்தலில் கொடுக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக மேன்முறையீட்டாளர் அவ்விடயத்தை குறைபாட்டை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அல்லது அக்கால விஸ்தரிப்புக்குள்ளாக மேன்முறையீட்டை செயலாளர் நிராகரிக்க முடியும்.

பெற்றுக்கொள்ளப்படும் எல்லா மேன்முறையீடுகளும் அந்நோக்கத்திற்காக செயலாளரால் பேணப்படும் பதிவேட்டில் பதியப்படும். அவ் பதிவுப்புத்தகமோ அல்லது அதனிலிருந்து பிரித்தெடுக்கப்படுபவைகளோ செயலாளரால் உரிய முறையில் அதிகாரமளிக்கப்படுவதுடன், அது ஒரு அரச ஆவணமாக அரச பரிசோதிப்பிற்காக பொதுமக்கள் பரிசோதிப்பிற்காக பொறுப்பான அமைச்சரின் அலுவலகத்தில் குறித்த விடயத்தின் அமைச்சரின் அமைச்சரின் எந்த அலுவலகத்திலும் எந்த வேலைநாட்களிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ஒரு மேன்முறையீட்டு மனு கொடுக்கப்பட்டு பின்பு செயலாளர் அந்த மேன்முறையீட்டின் கீழான தீர்மானம் தொடர்பான முழுப்பதிவுகளையும் அதிகாரசபையிடமிருந்தோ, அரசாங்க திணைக்களத்திடமிருந்தோ கூட்டுத்தாபனம், உள்ளுராட்சிஅதிகாரசபை, நியாயதிக்க சபை அல்லது அரசாங்க அதிகாரிகளிடமிருந்து எவ்வாறாக விடயங்கள் இருப்பினும் செயலாளருக்கு குறித்த விடயங்களை தொடர்புள்ள முழுப்பதிவுகளையும் முன்வைக்கும்படி கேட்டுக்கொள்வார். அதன் பின்பு செயலாளர் வேட்புமனுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் விலாசங்களை ஒரு வேட்பு மனு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ் அறிவிப்பு அனுப்படும் நாளிலிருந்து 10 வேலைநாட்களுக்குள் உள்ளான காலப்பகுதிக்குள் அலுவலகத்தில் அவைகளை குறித்து நடவடிக்கைகளை தொடரலாம் எனவும், அவ் நபர்களுக்கு அறிவித்து அவர் அவர்களிடமிருந்தான எதிர்ப்புக்கள் மற்றும் அவ் மேன்முறையீடு மீதான கருத்துக்களை அக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்வார் என அறிவிப்பார்.

எவ்வாறாயினும் மேன்முறையீட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை 20 யைவிட அதிகமாப இருப்பின் செயலாளர் ஆங்கில, சிங்கள அல்லது தமிழ் செய்திப்பத்திரிகைகளில் அவ்அறிவித்தலை பிரசுரிப்பதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கிறார்.

ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியின் முடிவில் செயலாளர் மேன்முறையீட்டாளருக்கு மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்ட ஆட்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட எதிர்ப்புக்கள், கருத்துக்கள் குறித்து அறிவிப்பார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்து 10 நாட்களுக்குள் மேன்முறையீட்டாளர் அதற்கு எழுத்து மூலம் பதிலளித்து அக்காலப்பகுதியிலே அவ் எதிர்ப்புக்கள் மற்றும் கருத்துக்கள குறித்து அவரது விருப்பங்களைத் தயாரிக்கலாம்.

ஒழுங்குவிதி 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியின் முடிவில் செயலாளர் ஒழுங்குவிதி 6 இன் கீழ் மேன்முறையீட்டாளர் மற்றும் எதிர்ப்புக்களையும் கருத்துக்களையும் தெரிவித்தவர்களுக்கு தன் முன்பாக ஒரு மேன்முறையீடு தொடர்பான விசாரணைக்காக அவ் அறிவித்தலிலே தான் ஒரு குறிப்பிடப்படும் திகதியிலும்  நேரத்திலும் தனக்கு முன்னாலே வருமாறு அழைக்கக்கூடியவராக இருக்கிறார்.

மேன்முறையீட்டாளரோ அல்லது அறிவித்தல் கொடுக்கப்பட்ட ஏனையோரோ எழுத்து மூலம் உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்ட சட்டத்தரணியோ அல்லது வேறு ஆட்களையோ தமக்கு பதிலாக பிரதிநிதித்துவம் செய்து அனுப்பலாம்.

செயலாளர் ஆனவர் அதிகாரசபைக்கோ, அரசாங்க திணைக்களத்திற்கோ, கூட்டுத்தாபனம் நியாயதிக்க சபை, உள்ளுராட்சி அதிகாரசபை அல்லது அரசாங்க அதிகாரிக்கு எவ்வகை விடயமாக இருந்தாலும் மேன்முறையீடு தொடர்பாக அதனுடைய கருத்துக்களையும் மேன்முறையீடுகளையும் வழங்கும்படி அறிவித்தல் கொடுக்கலாம். அதற்காக அவர்களை விசாரணையின்பொழுது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்காக எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியையோ அல்லது சட்டத்தரணியூடாகவோ அல்லது சட்டமா அதிபரையோ அனுப்பலாம் எனக் கேட்டுக்கொள்ளலாம்.

விசாரணையின் முடிவில் செயலாளர் ஆனவர் மேன்முறையீடு தொடர்பாக விசாரணை முடிவின் ஒரு வாரத்திற்குள்ளாக தனது முடிவு தொடர்பாக மேன்முறையீட்டாளருக்கும் மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்ட ஆட்களுக்கும் அரசாங்க திணைக்களம், உள்ளுராட்சி அதிகாரசபை கூட்டுத்தாபனம், நியாயதிக்கசபை, அல்லது அரச அதிகாரி எவராக இருந்தாலும் அத்தீர்மானத்தையும் அதற்கான காரணங்களையும் அறிவிப்பார்.

செயலாளரானவர் ஒவ்வொரு மேன்முறையீடு தொடர்பாகவும் ஏடுகளைப் பேணுவதுடன் பதிவிலுள்ள மேன்முறையீடு மீதான தீர்மானங்களுக்கான உள்ள காரணங்களையும் பதிவு செய்வார். காரணங்களின் கூடிய தீர்மானது ஒழுங்குவிதி 11 இன்கீழ் தொடர்பாடல் செய்யப்படும்.

 

மேன்முறையீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதில் தனக்கு மதியுரை வழங்குவதற்காக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தகைமையுடைய ஆட்களை கொண்ட ஒரு மதியுரைக் குழுவினை செயலாளர் அமைக்கலாம். அந்த விடயத்தில் விருப்புடைய ஒரு ஆளையோ அல்லது அவ் மேன்முறையீட்டுக்கு ஒரு தரப்பினரையோ அவ்வாறு அதில் நியமிக்க முடியாது. மேன்முறையீட்டு மதியுரைக்குழுவின் உறுப்பினர்களானவர்கள் விசாரணையின் பொழுது உரித்துடையவர்களாக இருப்பதுடன், விசாரணையின்பொழுது செயலாளரால் ஆலோசிக்கப்படக்கூடியவர்களாகவும் உள்ளனர். 

மேற்படி குழுவின் உறுப்பினர்களால் வழங்கப்படும் எல்லா மதியுரைகளையுமோஅல்லது ஏதாவது மதியுரைகளைக்கோ கட்டுப்பட்டவரல்லர்.;-
இந்த ஒழுங்குவிதிகளில் சூழமைவு வேண்டினாலே அன்றி

(அ). " சட்டம் என்பதன் அர்த்தம் 1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் காலத்திற்கு காலம் திருத்தப்பட்டபடியாக

 

(ஆ). அதிகாரசபை என்பதன் அர்த்தம் 1980 ஆம் ஆண்டு 47 ஆம்இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பதாகும்.


2.a.ii.

சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் சட்டம் 39 ஆவது பிரிவின் கீழான மேன்முறையீட்டுச் செயன்முறை

விண்ணப்பத்தையுடையவர் அல்லது உரிமத்தையுடையவர் இவ்வாறாயினும் பணியகத்தின் தீர்மானம் குறித்து முறைப்பாடு செய்பவர் அமைச்சரின் உரிய விடயப்பொருளாளரின் தீர்மானத்திற்கு எதிராக அவருக்கு தீர்மானம் தொடர்பாடல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம்.


2.a.iii.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சட்டம் 15 ஆம் பிரிவின் கீழான மேன்முறையீட்டுச் செயன்முறை

விண்ணப்பதாரி அல்லது உரிமத்தை உடையவர் எவ்வாறாயினும் அதிகாரசபையின் தீர்மானத்திற்கு எதிரான முறைப்பாட்டை அமைச்சரின் குறிப்பிட்ட விடயத்திற்கான செயலாளரின் தீர்மானத்திற்கு எதிராக அவருக்கு தீர்மானம் தொடர்பாடல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள்ளாக மேன்முறையீடு செய்யலாம்.

வியாழக்கிழமை, 17 மே 2012 11:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது