si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு Sri Lanka Climate Profile
இலங்கை காலநிலை தரவுக்குறிப்பு

புவியியல்

இலங்கை இந்துசமுத்திரத்திலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ளதுடன், 65,525 சதுரகி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தீவின் நீர்ப்பரப்பு தவிர்ந்த 62,336 சதுரகி.மீ காணப்படுகிறது. இது வட அகலாங்கு 6 – 10 இடையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 – 82 இடையிலும் அமைந்துள்ளது. இதன் உயர்ந்த பட்ச நீளமாக தெய்வந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரை 432 கி.மீ.உம், அதிகபட்ச அகலமாக கொழும்பிலிருந்து சமனகந்த வரை 224 கி.மீ உயரமாகவும் உள்ளது. கண்ணீர்த்துளி வடிவத்தினையுடைய இலங்கையானது  அதன் ஆச்சரியமூட்டும் தரைத்தோற்ற அம்சங்களை நிறைந்து கொண்டுள்ளதுடன், உலகிலேயே மிக இயற்கை அழகுள்ள இடமாகவும் மாற்றுகின்றது. துலாம்பரமாக தெரியும் உயர வேறுபாடுகளினால் மத்திய மலைநாடு, சமவெளி, கரையோர நிலைம் என்ற மூன்று வலயங்களைக் கொண்டுள்ளது.

 

கரையோர ஒடுங்கிய நிலையமானது தீவைச் சூழ்ந்துள்ளதுடன்  மணற்கடற்கரைகளையும், கடனீரேரிகளையும் கொண்டுள்ளது. சிறந்த கடற்கரையோரமாக தென்கரையோரமாகவும், தென்மேற்கு கரையோரமாகவும், கிழக்குகரையோரமாகவும் உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கில் கரையோரமானது பளிங்குப்பாறைகள், செங்குத்துப்பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் கரைக்கு கிட்டிய தீவுகளின் பல்வேறுபட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், வடகிழக்கு கரையோரத்தில் திருகோணமலையானது உலத்தில்  சிறந்த இயற்கை துறைமுகத்தை உருவாக்குகின்றது. அத்துடன் தென்மேற்கிலே காலியில் சிறிய பாறைத்துறைமுகமும் உள்ளது. வடமேற்கிலே மன்னார் தீவானது பிரதான நிலத்தை ஒரு பாலம் மூலம் இணைக்கிறது. ஆதாம் பாலாமாக என அழைக்கப்படும் இது சிறுதீவுகளையும், மணற்திட்டிகளையும் கொண்ட நீண்ட சங்கிலித்தொடராக தென்னிந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துகிறது.

இலங்கையின் ஆறுகள் மத்திய மலைநாட்டில் சிவனொளிபாதமலைக்கு அண்மையில் உருவாகி ஒடுங்கிய அகன்ற பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளின் ஊடாக பாய்ந்து இறுதியாக திருகோணமலைக்கு அண்மையில் கடலைக் கலந்து மலைச்சரிவு, நீர்வீழ்ச்சி ஆழ பள்ளத்தாக்குகள் போன்ற தரைத்தோற்றங்களை உருவாக்கி சென்று  கடலைக் கலக்கிறது. அநேகமான ஆறுகள் குறுகியனவாகவும், தொடர்ச்சியற்ற சமவெளிகளால் அடிக்கடி குறுக்கிடப்படுவனவாகவும் உள்ளன. இலங்கையின் மிக நீளமான நதி மகாவலி கங்கையாகும். இதன் நீளம் 335 கி.மீற்றர்கள். ஆற்றின் மேற்பகுதியானது கடுமையானதாகவும் ஆழம் அகலம் காண முடியாததாகவும் அதன் கீழ்ப்பகுதியானது காலத்திற்கு காலமான வெள்ளங்களை கொண்டு செல்வதாக உள்ளது. இவ்வாறானது இயற்கை மழைவீழ்ச்சி குறைவாக உள்ள வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்ப்பாசன முறைமைக்கு தேவையான மிக முக்கியமான நீரை வழங்குகின்றது.

சராசரி வெப்பநிலை

வருடாந்த சராசரி வெப்பநிலையானது 28 -32ºC வீச்சைக் கொண்டுள்ளது. சராசரி வெப்பநிலையானது மிகவும் குறைந்த அளவான 16ºC மத்திய மலைநாட்டின் நுவரெலியாவில் காணப்படுகிறது. அங்கே குளிர்காலப்பகுதியின் பல இரவுகளில் உறைபனி ஏற்படுகிறது. 32oC ஆனது உயரளவான கிழக்கு கரையோரத்தின் திருகோணமலையில் காணப்படுகிறது. கரையோரப்பகுதிகள் கடற்காற்றால் குளிர்மைப்படுத்தப்படுகின்றன..

பருவப்பெயர்ச்சிக்காற்றுக்கள்

இலங்கையானது மத்தியகோட்டு வெப்பவலயப்பகுதியில் காணப்படுவதால் பருவப்பெயர்ச்சிக் காற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டு நான்கு வேறுபட்ட பருவகாலங்களைக் கொண்டுள்ளன. தரைத்தோற்ற உயர வேறுபாடும் வெப்பநிலை வேறுபாட்டில் செல்வாக்கு செலுத்துகிறது. தாழ்ந்த நிலப்பகுதியில் எப்போதும் வெப்பம் நிலவுவதுடன், உயர்நிலப்பகுதிகளுக்கு செல்லும்பொழுது அங்கே குளிர்நிலைமை காணப்படுகிறது. பிரகாசமான வெயில் நாட்களானவை பொதுவாக உள்ளதுடன், பருவப்பெயர்ச்சிக் காலப்பகுதிகளிலும் அது உயர்வாகவே உள்ளது. வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக்காற்றானது வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் தெசம்பரிலிருந்து ஜனவரி வரையும் மழையைக் கொண்டுவர மேற்கு மற்றும் தெற்கு மத்தியபகுதிகளுக்கு மே யிலிருந்து யூலை வரை தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மழையைக் கொண்டு வருகிறது.

புதன்கிழமை, 16 மே 2012 17:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது