si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு அமுல்படுத்தல் முகவர்கள்
இணைந்த நிறுவனங்கள்

மத்திய பொறியியல் உசாவுகைப் பணியகம்

மத்திய பொறியியல் உசாவுகைப் பணியகம்

நிலையான அபிவிருதிக்கான அர்ப்பணிப்புடன் பொறியியல் உசாவுகை சேவைகளை வழங்குவதற்காக 1973 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஒரு கூட்டாண்மை நிறுவனமாக மத்திய பொறியியல் உசாவுகைப் பணியகம் (CECB) (ADB DACON No. - 002879) உள்ளது. செயற்திட்டங்களின் திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் மிக வலுவான நீண்ட கால தரவுகளுடன் நன்கு தாபிக்கப்பட்ட நிறுவனமாகவும் அதி உயர் மதிப்பைப் பெற்ற நிறுவனமாகவும் இப் பணியகம் உள்ளது. அரச நிறுவனமொன்றாக இருந்த போதும், அந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுய நிதியளிப்பு நிறுவனமாக பணியகம் செய்ற்பட்டு வருகின்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய அபிவிருத்திச் செயற்திட்டங்களின் முன்னெடுப்பாளராக பணியகம் செயற்பட்டுவந்துள்ளதுடன் பொறியியல் துறையின் பல்வேறு துறைகள் தொடர்பாக இலங்கையில் பரந்த அளவில் முன்னணி உசாவுகை சேவையினை வழங்கியும் வருகின்றது. மகாவலி செயற்திட்டத்தின் அமுல்படுத்தலில் பங்கு கொண்ட மிக முக்கியமான நிறுவமொன்றாக இலங்கை பொறியியல் உசாவுகைப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. (இலங்கையின் பாரிய ஆறுகளின் நீர் வீழ்ச்சிச் செயற்திட்டங்கள்). பல பில்லியன் ரூபாய் பெறுமதியான இவ்வாறான செயற்திட்டங்களினை அமுல்படுத்தும் போது, பல்வேறுபட்ட சர்வதேச உசாவுகை நிறுவன  நிபுனர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன்  இந்த சங்கத்தின் ஊடாக உறுதியான பொறியியல் போட்டித்தன்மைகளையும் நிபுவத்தினையும் அபிவிருத்தி செய்துள்ளது.

பாரிய நீர் மின்சார மற்றும் நீர்ப்பாசனச் செயற்திட்டங்களுடன் தொடர்புடைய (பிரவேசப் பாதைகள், பாலங்கள், கட்டடங்கள் மற்றும் நீர் விநியோகங்கள்) உட்கட்டடமைப்பு அபிவிருத்தியுடன் தொடர்புடைய சகல செயற்திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் மேற்பார்வைப் பொறுப்பினை பணியகம் நிறைவேற்றியுள்ளது. இந்த பாரிய சகல செயற்திட்டங்களினுதும் மிக முக்கியமான பகுதிகளாக சமூக பொருளாதார நோக்கங்கள் (மீள் குடியேற்றம், சனசமுக அபிவிருத்தி) மற்றும் சுற்றாடல் சார் கற்கைகள் காணப்படுகின்றன.

மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
மத்திய பொறியியல் உசாவுகைப் பணியகம்
 
இலங்கை பொறியியல் உசாவுகைப் பணியகம்
இல. 415, பவுதாலோக்க மாவத்தை,
கொழும்பு 07.
இலங்கை.

+94 112 668800, +94 112 696217

+94 112 687369

www.cecb.lk

 

மத்திய சுற்றாடல் அதிகார சபை

 

மத்திய சுற்றாடல் அதிகார சபை

1988  மற்றும்  2000  ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்ட 1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி அதிகார சபையானது, சுற்றாடலை பாதுகாத்தல், முகாமைத்துவமும் மேம்படுத்தலும் என்பவற்றுக்கான ஏற்பாடுகளை அளித்தல், சுற்றாடலின் பண்புசார் தரத்தை  ஒழுங்குப்படுத்தல், பேணுதல், கட்டுப்படுத்தல் போன்றே மாசுப்படுத்தலை தவிர்த்தல், குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களின் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
மத்திய சுற்றாடல் அதிகார சபை
 

104, பரிசர பியச,

ரொபட் குணவர்தன மாவத்தை,

பத்தரமுல்ல

இலங்கை.
+94-11-2872278, 2872263, 2873447-9
+94-11-2872415, 2873447
www.cea.lk

 

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம்

alt

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம்

மேலதிக விபரங்களுக்காக அழைக்கவும்:
கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம்
 
4 ஆம் மாடி, மீன்பிடித்துறை  அமைச்சுக் கட்டடம்,
புதிய செயலகம்,
மாளிகாவத்தை
மருதானை
கொழும்பு 10
இலங்கை 
+94-11-2449754
+94-11-2438005
www.coastal.gov.lk

 

வனப்பாதுகாப்பு திணைக்களம்

 

வனப்பாதுகாப்பு திணைக்களம்

 

வனப்பாதுகாப்பு திணைக்களம் 1887 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வனக்கட்டளைச்சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், காடழிப்பு சதவீதத்தை  குறைப்பதற்காக வினைத்திறனுடன் கூடிய பல முயற்சிகளை இத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இத் திணைக்களத்தினால் மேற்கொள்கின்ற கடமைப்பொறுப்புகள் 07 தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன், அவை, வனவியல், வனப் புள்ளிவிபரவியல் மற்றும் முகாமைத்துவம், சுற்றாடல் முகாமைத்துவம், வன ஆராய்ச்சி மற்றும் கல்வி, சமூக வனவியல் மற்றும் வனவிஸ்தரிப்பு ,  திட்டமிடல், முன்னேற்ற நிர்வாகம் மற்றும் வனப்பாதுகாப்பு,  சட்டவாக்கப் பிரிவு என்பனவாகும்.

மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
வனப்பாதுகாப்பு திணைக்களம்
 

இலக்கம்  82

சம்பத்பாய

ரஜமல்வத்தை வீதி,

பத்தரமுல்ல

இலங்கை.

+94-11-2866631-2
+94-11-2866633
www.forestdept.gov.lk

 

இரத்தினக்கல், தங்காபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

 

இரத்தினக்கல், தங்காபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

 

நோக்குகை

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண தொழிலில் விருத்தி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் பங்குபற்றி, குறித்த தொழிலில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பாடநெறி நடவடிக்கைகளில் சிறந்த பிராந்திய நிலையமாதல்.  

பணி

எமது நலன் விரும்பிகளின் திருப்தியின் பொருட்டு புதிய இரத்தினக்கல் படிவுகளை ஆராய்தல், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், ஆற்றல்கள், வினைத்திறமை மற்றும் தர அபிவிருத்தி என்பவற்றுக்கு தலைமைத்துவம் வகித்து, உயர் தரத்திலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையில்  இரத்தினக்கல், தங்காபரண தொழிலில் போட்டியுடன் கூடிய ஆற்றலை மேம்படுத்தல்.

நிறுவனத்திற்குரிய அதிகாரங்கள்

இந் நிறுவனத்திற்குரிய அதிகாரங்கள் 1995 ஆம் ஆண்டு யூலை மாதம் 28 ஆந் தேதிய 882 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கையளிக்கப்பட்டுள்ளது.

         i.            இலங்கையில் இரத்தினக்கல், கனியம் மற்றும் குறித்த படிவுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் அத்துடன் அதற்கு ஏற்புடையதான விடயங்கள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

a)       இரத்தினக்கல் படிவுகளின் அமைப்பு.

b)       அவற்றை இனம்காணல்.

c)       இரத்தினக்கல் வகைப்படுத்தும் முறை.

d)       களத்துடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள்.

      ii.            சுரங்கங்களை வெட்டுதல், இரத்தினக்கல் வெட்டுதல், இரத்தினக்கல் வெட்டி பட்டை தீட்டூம் முறைகள்  மற்றும் தங்காபரண உற்பத்தி ஆகிய துறைகளுக்கு ஏற்புடையதான இயந்திரங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் ஏனைய ஆலோசனைகளை வழங்குதல்.

        iii.            கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல்

                                        a)      இரத்தினக்கல் வெட்டுதல், பட்டை தீட்டுதல், மற்றும்       இனம்காணல்.

b)       தங்காபரண உற்பத்திகள்.

c)      வைரம் உள்ளிட்ட இரத்தினக்கல் பற்றிய ஆய்வு விஞ்ஞானம்.

d)       தங்காபரண வடிவமைப்பு உற்பத்தி.

e)      வெப்பத்தால் தீட்டுவதன் மூலம் இரத்தினக்கல் வகைப்படுத்தல்.

f)       இரத்தினக்கல் மற்றும் தங்காபரண தொழிலுக்கு  ஏற்புடையதான ஏனைய பிரிவுகள்.                                                                                                                                            

நிறுவனத்தின் பணிப்பாளர் சபை

       1.       திரு பயிசால் ரசீன் ( தலைவர்)  - பணிப்பாளர் சபையின் தலைவர்.

       2.      செல்வி அயோமா நந்தசேன – சபை உறுப்பினர் (பொருளாளர் பிரதிநிதி)

3.     பேராசிரியர் திரு பீ. விஜயாநந்த  - சபை உறுப்பினர்  (தலைவர் – புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம்)

4.     திரு. இன்ஜித் அபோன்சு – சபை உறுப்பினர்  (சிரேஷ்ட விரிவுரையாளர் –கொழும்பு பல்கலைக்கழகம்)

பெயர்        : இரத்தினக்கல், தங்காபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.

முகவரி   : ஹிதெல்லன , இரத்தினபுரி.

தொ.இல         :045-2228808 / 22228801

பெக்ஸ்    :045-2228800

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம்

 

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம்

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம் 1993 ஆம் ஆண்டு ஸ்தபிக்கப்பட்டது. இந் நிறுவனம் நாட்டின் கனிய வளங்களின் பாதுகாப்பு, ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்காக பங்களிப்பை வழங்குகின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்காக கனிய வளங்களை உரிய வாறு வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் சுற்றாடலுக்கு நன்மைபயக்கும் வகையில் பாதுகாப்பான முறையல் கனிய வளங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக ஆராய்தல் இப் பணியகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இப் பணியகத்தின் பிரதான பொறுப்பு யாதெனில், முறையாக புவியியல் நிலப்படத்துறை மற்றும் நாட்டின் கனிய வளங்களை மதிப்பிடுதல் என்பனவாகும்.

 
 
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
புவிச்சரிதவியல் மற்றும் அளவைப்பணியகம்
 

இலக்கம். 04, சேனாநாயக்க கட்டிடம்

காலி வீதி, தெகிவளை, இலங்கை.
+94-11-2725746, 2725751, 2739307-8
+94-11-2735752
www.gsmb.gov.lk

 

இலங்கை மகாவலி அதிகாரசபை

இலங்கை மகாவலி  அதிகாரசபை

மேலதிக விபரங்களுக்காக அழைக்கவும்:
இலங்கை மகாவலி  அதிகாரசபை
 
இல. 500, டி.பி. ஜயா மாவத்தை,
கொழும்பு 10.
இலங்கை 
+94-11-2687491-5
+94-11-26888340
mahaweli.gov.lk

 

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபை

 

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபை

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபையினால், கடல் மாசடைதலை தவிர்த்தல்,  ஏனைய விடயங்கள் தொடர்பாகவுள்ள சர்வதேச நியமங்களை நடைமுறைப்படுத்தல்  அத்துடன் சட்டரீதியான ஒழுங்குவிதிகளின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ள தேசிய, சர்வதேச பிணைப்புகளுக்கு ஏற்புடையதாகும் வண்ணம் கப்பல் சார்ந்த மற்றும் கரையோரங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலிருந்து கடற் சுற்றாடல் முறைமையை பாதுகாக்கப்படுகிறது.   

 
 
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
மத்திய சுற்றாடல் அதிகார சபை 
 

104, பரிசர பியச,

ரொபட் குணவர்தன மாவத்தை,

பத்தரமுல்ல

இலங்கை.
+94-112687520, 2690604-5
+94-11-2687451
www.mppa.gov.lk

 

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை


தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை

 

இரத்தினக்கல் தொழிலின் அபிவிருத்தி, ஒழுங்குப்படுத்தல், மற்றும் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக 1971 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இரத்தினக்கல் தொழிலின் அபிவிருத்தி, ஒழுங்குப்படுத்தல், மற்றும் ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாகக்கொண்டு  தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண தொழிலின் வளர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கு தேவையான சேவைகளை அளிக்கின்றது. அதன் மூலம் இரத்தினக்கல் படிவுகளை இனம் காணுதல், இரத்தினக்கல் அகழ்வு, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண வியாபாரம், பெறுமதிகளை விருத்திச்செய்தல், பெறுமதிகளை சேர்த்தலசேர்த்தல்தாதரழதமதொலைசேர்த்தல்ழைழமி,  சான்றுப்படுத்தல் என்பவற்றுக்கு தேவையான வசதிகள் அழிக்கப்படுகின்றன. மேலும், அதிகார சபை ஆராய்ச்சி, ஆய்வுகூட சேவைகள், தங்காபரண மதிப்பீடு, தனிக்குறியிடுதல் , அவற்றை உள்நாட்டு,  வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி மற்றும் வியாபாரம் செய்தல் என்பவற்றையும் மேற்கொள்கின்றது. 

அதே போன்று வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அதிகார சபையால் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண தொழில் தொடர்பாக ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகின்றது. 

அதிகார சபையின் பிரதேச அலுவலகங்களின் வலையமைப்பு

கொழும்பு பிரதேச அலுவலகம் –இலக்கம் 25, காலி முகத்துவார சதுக்கம்,கொமும்பு 03.
011 23990645-8 (Gen) / 011 2390651 (Dir) 011 2320758
 
இரத்தினபுரி, பிரதேச செயலகம், பிரதேச தலைமையகம், இரத்தினபுரி .
045 2222159 (Gen) 045 22 23139
 
எஹலியகொடை பிரதேச செயலகம்  - பிரதான வீதி, எஹலியகொடை .
036 2258170 036 2258170
 
மாத்தறை பிரதேச செயலகம், இலக்கம்  391, அநாகரிக தர்மபால மாவத்தை, பம்புரன,மாத்தறை.
041 2223330 041 2223330
 
நாஉல பிரதேச செயலகம் – தம்புள்ள வீதி, நாஉல.
066 2246094 066 2246094
 
§ மொணராகலை பிரதேச செயலகம்,  - இலக்கம். 29, சொரவ்வ  வீதி,  மொணராகலை.
055 2276124 055 2276124
மேலதிக தகவல்களுக்காக அழைக்கவும்:

 

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை,

இலக்கம்  25,

கொல்பேஸ் டெரஸ், 

கொழும்பு 03
+94-11-2390645 -8
+94-11-2320758
gemautho@sltnet.lk
www.srilankagemautho.com

 

அரச மரக் கூட்டுத்தாபனம்

 அரச மரக் கூட்டுத்தாபனம்  

 

1957 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க அரச   கைத்தொழில்  கூட்டுத்தாபன சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் கீழ் 1968 ஆம் ஆண்டு அரச மரக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது.  

இக் கூட்டுத்தாபனத்தை ஸ்தாபிப்பதன் நோக்கம் யாதெனில்,  காடுகளில் உள்ள மரங்களை வடி சாறு எடுத்தல், , அந்த மரங்களை வெட்டியெடுத்தல், முடிவுப் பொருள்களாக மாற்றுதல், மரக்குற்றிகளை  விற்பனை செய்தல், காடுகளில் பாதைகளை நிருமாணித்தல், மரங்கள் மற்றும் விறகு விற்பனை நிலையங்களை நிர்வகித்தல், மரங்களைக்கொண்டு மாற்று உற்பத்திகளை மேற்கொள்ளுதல் மற்றும்  அவற்றை விற்பனைசெய்தல் என்பனவாகும். பின்னர் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைளை பல்வகைப்படுத்தியதுடன், மரங்களின் ஏற்றுதி இறக்குமதி,  மரம் நடுதல், மீண்டும் காடு வளர்ப்பு, பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்கு உரியதான காடுகள் மற்றும் வனச்செய்கைகளின் விஞ்ஞான முகாமைத்துவம், மற்றும் தனிப்பட்ட காணிகளில் மரங்களை கொள்வனவு செய்தல் என்பனவற்றையும் மரக் கூட்டுத்தாபனம் மேற்கொள்கின்றது.  
 
 
மேலதிக தகவல்களுக்காக அழைக்கவும்
அரச மரக் கூட்டுத்தாபனம்
 

 

இலக்கம் 82, சம்பத்பாய,
ரஜமல்வத்தை வீதி,

பத்தரமுல்ல

இலங்கை

+94-11-2866601-5
+94-11-2866623
www.timco.lk