si_uni  ta_uni
SinhalaEnglish
 • Haritha Ta

முகப்பு கருத்திட்டங்கள்
கருத்திட்டங்கள்

1

ஹப்புகொட, எல்பிற்றியா மற்றும் றபெடிகல கிராமங்களிலுள்ள Puntias bandula மீதான பாதுகாப்பு செயற்திட்டத்தை தொடர்தலும், Newgala காட்டிற்கு இடம்மாற்றுதலும்


பிரதான விசாரணையாளர் : கலாநிதி. தேவக வீரக்கோன்
சிரேஷ்ட விரிவுரையாளர், விலங்கியல் திணைக்களம், கொழும்பு பல்கலைக்கழகம்


இணை விசாரணையாளர்கள் : திரு. சம்பத் குணதிலக்க IUCN
IUCN
  திரு. தாரக்க முத்துநாயக்க
கொழும்பு
பல்லைக்கழகம்
  திருமதி. கெளசலா விக்கிரமசிங்க
பல்லுயிரினச் செயலகம், சுற்றாடல் அமைச்சு

Puntias bandula என்பது ஒரு மிகவும் அழிவை எதிர்கொண்டிருக்கும் நன்னீர் வாழ் மீனாகும். இது றபெடிகல, ஹப்புகொட, மினிபுர கிராமங்கள் வரையாக 2கிமீ. நீளமான நீரோடையில் பரவிக் காணப்படுகிறது. இந் நீரோடையானது மனித குடியிருப்புக்களால் சூழப்பட்டிருப்பதும் இவ் வகை இனம் மீது மிகஉயர்வான மனிதத் தலையீடும் காணப்படுகிறது. இதனுடைய எண்ணிக்கை தொகையானது கடந்த இரு தசாப்தங்களிலே 90% ஆக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் அதனுடைய தற்போதைய எண்ணிக்கை அளவான 200 வளர்ந்த உயிரினங்களை விட குறைவாகவே உள்ளது.

Puntias bandula வை காப்பாற்றும் நிகழ்ச்சித்திட்டமானது 2010 இல் ஆரம்பிக்கப்பட்டு விட்டதுடன் அது பின்வரும் இலக்குகளை சாதித்துள்ளது..

 • இவ்வகை அமைவிடத்தில் உயிரின வகையின் தற்போதைய நிலையை கண்காணித்தல்.
 • இதன் மாதிரி அமைவிடத்திலும் அதனைச் சூழவும் Puntias bandula வை பாதுகாக்கும் முக்கியம் தொடர்பான ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.
 • இவ்வகைமாதிரி அமைவிடத்தில் இனவகையிற்கான சனசமூக அடிப்படையிலான பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நிறுவுதல்.
 • இரண்டாவது உயிரின எண்ணிக்கையை நிறுவுவதற்கான ஒரு பொருத்தமான இடத்தை இனங்காணுதல்.
 • சேரும் இடம், நீரேந்தும் இடம் என்பவற்றை நிறுவுவதன் ஊடாக தற்போதைய வதிவிடத்தை முன்னேற்றுதலும், மரம் நடுதல் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் கலந்த பயிரிடலை ஊக்குவிப்பதன் ஊடாக அதனுடைய வாழ்விடங்களை அதிகரித்து பல்லுயிரினத்தன்மையையும், பொருளியல் நிலையையும் அதிகரித்தல்.

கருத்திட்டத்தின் தொடர்ச்சி காரணமாக பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள எண்ணப்படுகிறது.

 • மூன்று கிராமங்களிலும் சுற்றாடல் குழுக்கள் தமது உரிய கிராமங்களில் பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள ஆதரவளிப்பதை தொடர்தல்.
 • ஹப்புகொட மற்றும் றபெடிகல கிராமங்களில் இரண்டு சபைகளை நிறுவுதல்.
 • நாட்டப்பட்டள்ள மரங்களைக் கண்காணித்து, தேவையானதாக இனங்காணப்படும் இடங்களில் மேலதிக மரங்களை நடுவதற்கு வழங்குதல்.
 • Pbundula வின் எண்ணிக்கைத்தொகையின் நிலையை தொடர்ந்து கண்காணித்து அதன் தற்போதைய நிலையிலிருந்து மீளப்பெறும் அதன் இயலுமைக்காக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு செயற்பாட்டின் ஆக்கத்தை மதிப்பிடுதல்.
 • பாடசாலை விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்தல்.
 • Elpitiya வில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையானது இவ்வாறான சிறு சிறு எண்ணிக்கையானவைகள் இவ்வகைமாதிரி அமைவிடத்திற்கு வெளியே உள்ள நீரோடைகளிலும் சிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
 • Newgala வனப்பாதுப்பிடத்தில் காட்டு உயிரினங்களுடன் சுய நீடித்து வளரக்கூடிய தன்மையை நிறுவிக்கொள்ளுதல்.

2

ஈரவலயத்தில் கட்டுப்பாடின்றி வளரும் வல்லமையுள்ள ஒரு நீர்த்தாவரமாகிய Ludwigia sedioides னை குறித்து விசாரித்தல்.


பிரதான விசாரணையாளர் :

கலாநிதி. K. யக்கண்டவல
தோட்டக்கலை மற்றும் நிலத்தோட்டத் திணைக்களம், இலங்கை வடமேல் பல்லைக்கழகம்

அழிப்பதற்கு சிரமமானதான தாவரங்களின் படையெடுப்பானது இயற்கை உயிரியல் பல்வகைத்தன்மைக்கும் சாகிய முறைமைக்கும் ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. தாவரங்களை புதிய பிராந்தியங்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு வழிவகையாக தோட்டக்கலை வர்த்தகமானது காட்டப்படுகிறது.

Eichornia என்பன இலங்கையில் காணப்படும் கடுமையாகப் பரவும் பொதுவான நீர்த்தாவரங்களாக உள்ளன.

Ludwigia sedioides L. Mosaic பூ எனப் பொதுவாக அறியப்படுகிறது. இது தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதுவான தண்டுகளைக் கொண்டு இரு வருடங்களுக்கு மேல் வாழும் தாவரமாகும். NAQDA சொல்வதின் பிரகாரம் இது ஒரு அலங்காரப் பொருள் கடற்தாவரமாக அறிமுகப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிரலில் உள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளானவை Ludwigia sedioides L. ஆனது துரிதமாக பரவுவதாகவும், கம்பஹா மாவட்டத்தின் பல நீர் தடாகங்களை ஆக்கிரமிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆகவே இவ்வாய்வானது மேல்மாகாணத்தில் ஒரு துரிதமான கருத்தாய்வாக நடாத்தப்படுவதுடன் Ludwigia sedioides இன் எண்ணிக்கைப் பதிவுகள் மற்றும் அதன் பரவுகை அளவு அது பரவும் வழிவகை குறித்த ஆய்வு மற்றும் அதனுடய பரவுகை மூல இயலுமை குறித்தும், அதனுடைய பரவுகையை தடுப்பதற்கான தகவல்களை வழங்கும் பொருட்டு ஆய்வு செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் கடற் சாகியத்தில் இது ஒரு விரைவாகப் பரவும் தாவரமாக இருப்பின் அதனை முகாமைத்துவம் செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.


3

நீர் hyacinth (Eichhornia crassipes)சூழலியல் மற்றும் உயிரியல் அம்சங்கள் குறித்த ஒரு ஆய்வு


பிரதான விசாரணையாளர் :

திருமதி. பிரதீபா பெரேரா
தாவரவியல் திணைக்களம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

இணை விசாரணையாளர்கள் : கலாநிதி. சுடீரா ரன்வெல
தாவர விஞ்ஞானத் திணைக்களம் கொழும்பு பல்கலைக்கழகம்
  கலாநிதி. தேவகா வீரக்கோன்,
விலங்கியல் திணைக்களம், கொழும்பு பல்லைக்கழகம்

இலங்கையானது பல் உயிர்கள் வாழும் ஒரு முக்கிய விடயமாக அறிக்கையிடப்படுகிறது. ஏனெனில் அங்கே 30 க்கு மேற்பட்ட விரைவாகப் பரவும் அந்நிய தாவரவகைகள் (IAS) பதிவு செய்யப்பட்டுள்ளன. நீர் hyacinth iஎன்பது இலங்கையின் கடல் சாகிய முறைமையில் மிகவும் பாரதூரமாக படையெடுக்கும் ஒரு தாவரமாக நிழற்படுத்தப்படுகிறது. இவ்வகைத் தாவரத்தை இல்லாதொழிற்பதற்காக கை மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைமைகளைப் பயன்படுத்தி கடந்த 100 வருடங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதிலும் Eichhornia ஆனது இன்னும் ஒரு தீவு பூராகவுமான பரவும் ஒரு அச்சுறுத்தலாக பல தீவின் நீர்த்தொகுதிகளில் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இவ் இனத்தை தாக்கவிளைவுள்ள முறையில் கட்டுப்படுத்துவதற்கு எமதுஇயலுமை இல்லாதிருப்பதற்கு எமது சூழலில் இதன் உயிரியல் சுற்றாடலியல் அம்சங்கள் குறித்த பூரண அறிவின்மையும் ஓரளவிற்கு காரணமாக உள்ளது. ஆகவே இந்தத் தரவு இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையில் வளரும் Eichhornia crassipes வின் சாகியவியல் உயிரியல் மீதான விபரமான கற்கை ஆய்வானது அவசரமாக தேவைப்படுகிறது. அதன் மூலமாகவே இதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்வதற்கான தந்திரோபாயங்களை விருத்தி செய்து பலப்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு விரைவாக பரவுகைகளின் துரித்த வளர்ச்சிக்கும் பரவுகைக்கும் சுற்றாடல் காரணிகள் பெரும் பங்கு வகிப்பதாக காணக்கிடைக்கிறது. இவ் ஆய்வானது Eichhornia crassipes இன் தாவர மற்றும் இனப்பெருக்க வளர்ச்சி மீதான பெளதீக இரசாயன மற்றும் உயிரியல் வரைவெல்லைகளின் செல்வாக்கைப் புரிந்துகொள்வதை நோக்காகக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த அந்நியமான விரைவாகப் பரவும் இனவகைகளுக்கான மிகவும் தாக்கவிளைவுடைய முகாமைத்துவ தந்திரோபாயத்தை விருத்தி செய்யும் நீண்டகால இலக்குகளுடன் இதன் துரித வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் காரணிகள் அகற்றிய பின்பு மீளவும் பற்றிப் படரல் என்பனவற்றுக்கு பங்களிப்புச் செய்யும் காரணிகளை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் ஆராய்கிறது.


4

இலங்கையில் herpetofauna வின் விஞ்ஞான செயன்முறை இடைவெளிப் பகுப்பாய்வு, பரம்பல் மானிட அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த மதிப்பீடு


பிரதான விசாரணையாளர் :

திரு L.J. மென்டிஸ் விக்கிரமசிங்ஹ
இலங்கை ஈருடக உயிரிகள் மன்றம்

இலங்கையில் Herpetofauna ஆனது 318 உயிரின வகைகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. அவைகளில் 111 ஈருடக உயிரிகளாகவும், 100 பாம்புகளாகவும் 107 நான்கு கால் ஊர்வனவாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இவைகளின் திருத்தப்பட்ட மூலங்களையும் நிலைகளையும் மதிப்பீடு செய்வதற்காகவும் இவ்வுயிரிகளின் பல்வகை உயிர்களை அதிகரிப்பதற்காகவும் அவர்களின் சரியான வகைமாதிரி அமைவிடங்களை இனங்காண்பதற்காகவும் , தீவின் பெரும்பாலான பகுதிகளில்அவைகள் குறித்தான ஆய்வு இடைவெளிகளை நிரப்புவதற்காகவும், இவ் முக்கியமான குழுவுக்கான அவசியமான பாதுகாப்பு செயற்திட்டத்திட்டத்தை எடுப்பதற்காகவும், தற்போது கிடைக்கக்கூடியதாக இருக்கும் தரவினை சரிப்படுத்துவதற்காகவும், உரிய ஆய்வுகள் இவ் இன வகைகள்குறித்து செய்யக்கூடியதாக உள்ளன. இலக்குக்களை நிறுவிக்கொள்ளும் முகமாக இவ் ஆய்வுகளானவை தீவு பூராகவும் பாதுகாக்கப்பட்ட, மற்றும் பாதுகாக்கப்படாத இடங்களிலும் அத்துடன் 200 nautical மைல்கள் மேற்பட்ட சமுத்திரத்திலும் மேற்கொள்ளப்படும்.
இவ் ஆய்வானது பின்வரும் இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு எண்ணியுள்ளது:

 • IUCN உலகளாவிய சிவப்பு நிரல் அளவுகோலைப் பயன்படுத்தி உயிர்வகையின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடல் மற்றும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிர்வகைகளின் தேசிய மற்றும் உலகளாவிய சிவப்பு நிரலை இற்றைப்படுத்துதல். அத்துடன் அவ் இனவகை மீதான ஒரு தேசிய தரவுத்தளத்தை இற்றைப்படுத்துதல்.
 • உயிர்வகையை இனங்காண்டு பெயர் வைத்து இற்றைப்படுத்துதல், கடினப்பட்டு கண்டுபிடித்தல் புதிய உயிர்வகையின் விபரிப்பு உட்பட
 • தற்போதைய பரவல் வடிவத்தையும் வசிப்பிட தேவைப்பாடுகளையும் தீர்மானித்தல் .
 • ஆவண விசேடித்த அச்சுறுத்தல்கள் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஏற்படக்கூடிய தாக்கங்கள் உட்பட.
 • அவைகளின் பாதுகாத்தல் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தல்

5

Maragamuwa காட்டில் உள்ள மூன்று தெரிவு செய்யப்பட்ட வாழ்விடங்களிலுள்ள பலவித உயிர் தேனீ உயிரின வகைகளை மாத்தளை மாவட்டத்திலுள்ள இடத்தில் மீள உருவாக்குதல்


பிரதான விசாரணையாளர் :

சிரேஷ்ட விரிவுரையாளர், விலங்கியல் திணைக்களம் பெரதெனியா பல்கலைக்கழகம்

உயிரியல் பலவகைத்தன்மை என்பது மனிதன் அதிகரித்த விதமாக தங்கியிருக்க வேண்டிய வந்துகொண்டிருக்கும் ஒரு வளமாக உள்ளது. உயிரியல் பல்வகைத்தன்மையை பொதுவாக பூமியில் உயிர்வாழ்க்கையை பேணி ஊக்குவிக்கும் மிக முக்கியமான பொறிமுறைகளில் ஒன்றாக மகரந்தச் சேர்க்கை உள்ளது. மகரந்தச் சேர்க்கைகள் மீதான Sao Paulo பிரகடனத்தின் சிபார்சுகளில் ஒன்றானது பயிர் முன்னேற்றத்திற்கான இயற்கை மகரந்தச் சேர்க்கை ஊக்கிகளுக்கும் வளங்களாக விவசாய நிலத்தோற்றங்களின் உள்ளே இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் என்தாகும். இலக்கு வைக்கப்பட்ட தரைத்தோற்றங்களின் உள்ளே மகரந்தச் சேர்க்கை ஊக்கிகளின் எண்ணிக்கையையும் பல்வகைத்தன்மையையும் கண்காணிக்க வேண்டிய தேவையை அவ் ஆவணமானது மிகவும் முக்கியப்படுத்துகிறது.

மகரந்தச் சேர்க்கைக்கான விலங்குக் காரணிகளிடையே தேனீக்களானவை உலகிலே 25,000 க்கும் அதிகமான வகை இனங்களுடன் பல எண்ணிக்கையான இன வகைகளைக் கொண்ட பல் உயிர்க் குழுவாக உள்ளது. தேனீக்களானவை இனங்காணப்பட்டு பெயர் வைக்கப்படுவதிலும், சாகியவியல் ரீதியாகவும் அதிகம் பல்வகைத்தன்மையுடையதாக இருப்பதுடன், அவைகளின் இனவகைகள் சாகிய ரீதியில் நட்புக் கண்ணியமானவைகளாக இருப்பதனாலும் அவைகள் வதிவிடத்தரத்தில் உயிரியல் சுட்டிக்காட்டிகளாக முக்கியமானவையாக உள்ளன. அத்துடன் அவைகள் இனங்காணச் சுலபமானவையாகவும், உலகம் பூராகவுமான கற்கைக்குழுவிலும் மகரந்தச்சேர்க்கை ஊக்கப்படுத்திகளாக சாகியவியல் ரீதியில் முக்கியமான தொழிற்பாட்டைச் செய்கின்றன.
மேற்படி காரணிகளைப் பரிசீலித்து வதிவிடக் கட்டமைப்பு மற்றும் தாவரங்களின் உட்சேர்க்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மாத்தளை மாவட்டத்தில் மீள பரவச் செய்யப்படும் Maragamuwa  காட்டின் மூன்று காட்டு வகைகளிலுள்ள தேனீக்களின் பல்வகைத் தன்மைகளை மதிப்பிடுவதற்கு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.


6

இலங்கையிலிருக்கும் புதிய ஒக்கிட்ஸ் வகைமாதிரிகளைஆய்வு செய்வதும் விபரிப்பதும்


பிரதான அனுசரணையாளர் :

திரு. அஜந்த பலிகவதன

Nervilia  என்பது கிட்டத்தட்ட 65 இனவகைகளுடைய ஓக்கிட்டின் ஒருவகைப்பிரிவாகும். இதில் அவுஸ்திரேலியாவில் 6, அவற்றில் 2 அல்லது 3 அவ்விடத்திற்கே உரியதாகவும் காணப்பட ஏனையவை வெப்பவலய ஆசியாவில் பரவிக்காணப்பட 16 இந்தியாவிலும், 5 தென் ஆபிரிக்காவிலும் காணப்படுகிறது. இந்த இனப்பிரிவானது மண்தரச் சுட்டிக்காட்டியாக ஏனைய தாவரங்களுடன் உறவுகளைக் கொண்டிருப்பதாக இனப்பிரிவானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. வாழ்க்கைக் காலத்தின் ஒரு பகுதி நிலத்தின் கீழே அமைந்துள்ளதுடன், இலைகளும் பூங்கொத்துக்களும் வழமையாக கிளர்ந்தெழுந்து வளரும் காலப்பகுதியின் வேறுபட்ட காலங்களின் நிலத்திற்கு மேலே கிளர்ந்தெழுந்து தொடர்ந்திருக்கின்றன.

இந்த இனங்கண்டு பெயர் வைக்க பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் இனப்பிரிவானது  அதனுடைய தனித்த பூத்தோங்குதல் மற்றும் தனித்த இலை காரணமாக அடிப்படையில் புரிந்துகொள்வதற்கு குறைவாக விளங்கிக்கொள்ளப்படும் ஒரு இனப்பிரிவாக உள்ளதுடன், வழமையாக வளரும் காலப்பகுதியின் வேறுபட்ட காலங்களில் நிலத்தின் மேலெழுந்து பிரசன்னமாகியிருக்கிறது. இது அநேகமாக மூலிகைத் தொகுப்பு சேகரிப்பிற்கு உள்ளடக்கப்பட முடியாதநிலைக்கு இட்டுச்செல்கிறது.

ஆய்வின் நோக்கமும் இலக்குகளும்

புதிய இருவகை ஓக்கிட்ஸ்களை ஆய்வு செய்து விபரிப்பதும் மேலும் மூன்று மேலதிக இனவகைகளைக் கற்பதும்
IUCN உலகளாவிய சிவப்பு நிரல் அளவுகோலைப் பயன்படுத்தி இனவகைகளின் பாதுகாப்பு நிலையினை மதிப்பீடு செய்வதும், அச்சுறுத்தலுக்குள்ளாகும் இனவகைகளின் தேசிய மற்றும் உலகளாவிய சிவப்பு நிரலை இற்றைப்படுத்தலும்


7

 (Semnopithecus  vetulus philbricki) ஊதா முக இலைக் குரங்கின் பரம்பலும் சமூக நடத்தையும்


பிரதான விசாரணையாளர் :

திரு சிறியானி விக்கிரமசிங்க

ஊதா முக இலைக் குரங்குகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. ஊதா முக langur வின் நான்கு முக இனவகைளான ( S. vetulus, S. philbricki, S. monticola, S. nestor) ஆவன தற்பொழுது அங்கீகரிக்கப்படுவதுடன், நூதனசாலை மாதிரி மீது அடிப்படையாகக் கொண்ட ஆதரவுடைய s (S. harti) ஐந்தாவது உபஇன வகையாகவும் உள்ளன.

(Deraniyagala, 1995; Nekaris மற்றும் டி சில்வா, 2008).  கடுமையாக ஆபத்துக்குள்ளாகியிருக்கும் ஊதா langur(S. nestor) இந்தத் taxa க்களின் இறுதியாக ஆய்வு செய்யப்பட்டது மாத்திரமல்ல. அல்லாமல் அது 25 மிகவும் ஆபத்துக்குள்ளான முலையூட்டிகளில் நிரலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.  (Mittermerier et al., 2006). 
இக்கருத்திட்டத்தின் பொதுவான நோக்கு என்னவெனில் ஒரிடத்திற்கே உரிய endemic Semnopithecus  vetulus philbricki  யினது சாகியவியல் தேவைப்பாடுகளையும் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் அவற்றின் பரம்பலையும் வரைவிலக்கணம் செய்வதாகும். ( Ritigala மலைச்சாரல் மற்றும் மிகிந்தலை சரணாலாயம்) விசேடித்த இலக்குகளானவை

 • Semnopithecus  vetulus philbricki யின் உணவு விருப்புக்கள் மற்றும் வதிவிடத்தின் நிலைமாற்றங்கள் மற்றும் பெளதீமாற்றங்களை பகுப்பாய்வு செய்தல்
 • குரங்குக் கூட்டங்களுக்கு அவற்றின் வதிவிட மாற்றங்களுக்கான பதிற்செயற்பாடுகளை தீர்மானித்து முன்னறிவிப்பதை தரவுகளைச் சேகரித்தல்
 •   Semnopithecus  vetulus philbricki  கூட்டத்தின் உணவின் வகிபங்கை தீர்மானிப்பதும் அப்பகுதியில் வாழும் ஏனைய முலையூட்டிகளுடனான உறவுமுறையின் வகிபங்கையும் தீர்மானித்தல்..
 • உயிரியல் உட்கூற்றை அளவிடுவதும் ஒவ்வொரு காட்டு வேறுபட்ட சிறுதுண்டினதும் முப்பரிமாண கட்டமைப்பை அளவிடுதலும்.
 • மிகிந்தலைப் பகுதியிலும் Ritigala SNR  பகுதியிலும் Semnopithecus  vetulus philbricki    யின் பெருந்தொகையையும் பரம்பலையும் ஆய்வு செய்தல்.
புதன்கிழமை, 16 மே 2012 15:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது